- Saturday
- August 8th, 2026
உள்ளூர் தொழில் முயற்சியாளர்ளை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். புதிய அரசாங்கத்தினால் உள்ளூர் தொழில் முயற்சியாளர்ளை பலவீனப்படுத்தும் எந்த திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இளம் தொழில் முயற்சியாளர்கள் சங்கத்தின் 17வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள் சரியான...
யாழ்.பொதுநூலகத்தில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் உருவச் சிலையினை நிறுவவுள்ளதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜா தெரிவித்தார். யாழ்.கீறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களுக்கான விருந்துபசார நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும்...
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து 62 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் திவுலப்பிட்டிய, படல்கம, ஹுனுமுல்ல பிரசேங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரும் நேற்று மினுவாங்கொடை நீதவான்...
நீண்டநேரமாக படுத்துக்கொண்டு அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த இளைஞனொருவர் உயிரிழந்த சம்பவம், ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை (12) நண்பகல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிஸ்புல்லாஹ் நகர்-மிச்நகர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் மலிக் பௌமி (வயது 18) என்ற இளைஞன், கட்டிலில் படுத்துக் கொண்டு...
வல்வட்டித்துறை பிரதேசத்தில் இரண்டு கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்படி ஹெரோய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வல்வட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொண்டமானாறு அக்கறை கடற்கரை பகுதியில் வைத்து இன்று காலை 8.30 மணியளவில் இவை மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் இதுவரை...
வட மாகாண பட்டதாரிகளிற்கான 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் நேற்று வெள்ளிக்கிழமை வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது. வட மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை பூத்திசெய்யும் வகையில், 111 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு வட மாகாண கல்வி அமைச்சில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ரீதியில்...
மறைந்த அஸகிரிய பீடாதிபதி கலகம சிறி அத்தாதஸ்ஸி தேரரின் மறைவுக்கு தமிழ்த்தேசிய் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில் மறைந்த கலகம தேரருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நிர்மலமான வாழ்க்கையை வாழ்ந்த கலகம தேரர், நாட்டில் பௌத்த சாசனத்தை மிளிரச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். 1936ஆம் ஆண்டு துறவற...
இன்று முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூபா 7.20 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறில் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி சந்தேகநபரை 14 நாட்கள் மீண்டும் விளக்கமறியல் வைக்குமாறு வவுனியா மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் 16ஆம் திகதி வவுனியா பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நிலையில்,...
தேசிய மட்டத்தில் இடம்பெற்ற சிறந்த அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போட்டியில் கிளிநொச்சி மாணவன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். பாராளுமன்ற அனுசரணையுடன் ஊடகத் துறையினரால், நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறந்த அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சித்திட்டம், கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 38 போட்டியாளர்களை ஊடகத்துறையினர் தெரிவு செய்து, கொழும்பு இளைஞர் பாராளுமன்றத்திற்கு...
இணையத்தள சேவையை துரிதப்படுத்துவதற்கான கூகுள் பலூன் பரிசோதனை எதிர்வரும் 30 ஆம் திகதி சிகிரியாவில் நடத்தப்படவுள்ளது. இதன்போது இளைஞர்கள் மற்றும் ஊடகங்களுக்கு குறித்த பலூன் பரிசோதனை தொடர்பில் தெளிவூட்டப்படவுள்ளதாக தொழில் நுட்ப மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கூகுள் நிறுவனத்தினால் அண்மையில் பலூன் பரிசோதனை...
மறைந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியாரும் தமிழரசுக் கட்சியின் மகளிர் அமைப்பின் செயலாளரும் தமிழ் அரசியலில் மங்கையரின் பங்கை மாண்புறச் செய்த திருமதி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன் என வடமாகாண் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன்...
யாழ்ப்பாணம் நகரை அண்டிய பிரபல தேசிய பாடசாலையொன்றில் உயர்தரம் படிக்கும் மாணவர்கள் சிலர், 11ஆம் தரத்தில் படிக்கும் மாணவர்கள் இருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் 11 மாணவர்களிடம் உயர்தர மாணவர்கள் கப்பமாக பணம் தருமாறு கோரியதாகவும், அதனை அவர்கள் கொடுக்க மறுத்தமையால், தரம் 11 மாணவர்களின்...
சேவையாளர்களின் வரவு - செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பிலான சட்ட மூலத்தின் ஊடாக தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு இரண்டு கட்டங்களில் அதிகரிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர்...
யாழ்ப்பாணம் பஸ்ரியன் சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (11) காலை, வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபரை மோட்டார் சைக்கிளால் மோதிய குற்றச்சாட்டில், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குருசுவீதி, சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த பீற்றர் (வயது 53) என்ற வயோதிபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா...
யாழ். காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரி மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் என்பன இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுவிக்கப்படவுள்ளன என்று யாழ்.மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மூன்று மணி நேரப் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் வரவுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் கோப்பாய்...
"ராஜபக்ஷ படையணிதான் உலகிலேயே மிகப்பெரிய திருட்டுக் கும்பல். திருடப்பட்ட விதங்கள் இன்னும் மூன்று மாதங்களில் அம்பலப்படுத்தப்படும். சட்டத்தரணிகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்."- இவ்வாறு பிதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது....
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவபீட தமிழ் மாணவர்கள் 9 பேர் நேற்றிரவு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் கடும் காயங்களுடன் நிலாவெளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 50 இற்கும் மேற்பட்ட சிங்கள மாணவர்கள் மருத்துவபீடத்தினுள் நுழைந்து தம்மைத் தாக்கினர் என்று தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தெரிவித்தனர். திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், கல்முனையைச் சேர்ந்த ஒரு மாணவனும்,...
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மாணவர்களை உட்சேர்ப்புச் செய்வதற்கான திகதி ஜூலை மாதம் முதலாம் திகதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருந்தாலும் இலங்கையில் அதன் விலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம், பெற்றோலிய வளத்துறை அமைச்சு பாரிய தொகை கடன் செலுத்த வேண்டியிருப்பதே என்று அமைச்சர் கூறியுள்ளார். பெற்றோல் விலையை குறைப்பதற்கு பதிலாக கடன் சுமையிலிருந்து பொதுமக்களுக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
