Ad Widget

அரச ஊழியர்களுக்கு புதிய கட்டளை!

அரச ஊழியர்களுக்கு புதிய கட்டளை சட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச அலுவலகங்களுக்கு மூன்று தினங்களுக்கு தாமதமாக வரும் பணியாளர்களுக்கு அவர்களது சொந்த விடுமுறையிலிருந்து அரை நாள் விடுமுறை குறைக்கப்பட வேண்டும் என்று அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கும் நிர்வாகச் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.

அரச நிர்வாகச் சுற்றறிக்கையின் ஏற்பாடுகளுக்கு இணங்க, தாமதங்களுக்கு பதிலீடு செய்ய முடியாத சந்தர்ப்பங்களை மாதாந்தம் கணக்கிடல் வேண்டும்.

அதற்கேற்ப ஒவ்வொரு அலுவலரும் குறித்த மாதத்தினுள் பதிலீடு செய்யாத தாமதங்கள் தொடர்பாக இரண்டு சந்தர்ப்பங்கள் வரை அலுவலரின் விடுமுறைகளிலிருந்து கழிக்கப்படுவதில்லை என்பதோடு, இரண்டு சந்தர்ப்பங்களை விட அதிகமாயின் பதிலீடு செய்யாத சகல தாமதங்களுக்கும் அலுவலரின் விடுமுறைகளிலிருந்து அரை நாள் வீதம் குறைக்கப்படல் வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.

1992.01.25 மற்றும் 1994.01.24 ஆகிய அரச நிர்வாகச் சுற்றறிக்கைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள போதிலும், தற்போது புதிய சுற்றறிக்கை வெளியாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது

Related Posts