Ad Widget

தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிப்பு

கையடக்கத் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாகவும்,சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை 1 ரூபா 50 சதமாகவும் அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளர் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94 சதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஏற்கனவே காணப்பட்ட பக்கேஜ் இணைப்புக்கான கட்டணம் இதுவரை அதிகரிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஒரே தொலைபேசி இணைப்பு நிறுவனங்களுக்குள்ளும், வெளியார் தொலைபேசி இணைப்பு நிறுவனங்களுக்கிடையிலும் அழைப்புக் கட்டணம் சமப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related Posts