மின்வழங்கும் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு : ஜனாதிபதி உத்தரவு

மின் வழங்கும் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். தேசிய மின் கட்டமைப்பின் ஒத்துழைப்புடன் மின் விநியோகிக்கும் சகல நிலையங்களுக்கும் இராணுவத்தினர் மூலம் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும் நேற்றைய தினம் நாட்டின் சகல பகுதிகளுக்குமான மின் விநியோகம் தடைப்பட்டதோடு இதன்காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். நேற்றைய...

இராணுவ ரக் மோதி ஒருவர் உயிரிழப்பு

இராணுவ ரக் மோதியதில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று திங்கட்கிழமை (14) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் - மன்னார் (ஏ -32) வீதியில் பூநகரி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பூநகரி 4ஆம் கட்டைச்...
Ad Widget

வடமாகாண சபை அதிகமாக செலவு செய்ய எத்தணிக்கிறது

1,000 லீற்றர் குடிநீர் பெறுவதற்கு 7.95 ரூபாய் செலவாகும் இரணைமடுக் குடிநீர்த் திட்டத்தை கைவிட்டுவிட்டு, அதேயளவு குடிநீர் பெற 140 ரூபாய் செலவாகும் மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்துக்கு வடமாகாண சபை ஆதரவு தெரிவித்து, அத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார். மருதங்கேணி குடிநீர்த்...

கத்திமுனையில் ரூ.2.43 மில்லியன் பொருட்கள் கொள்ளை

மல்லாகம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இன்று திங்கட்கிழமை (14) அதிகாலை 12.30 மணியளவில் உள்நுழைந்த திருடர்கள், வீட்டிலிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். முகங்களை கறுப்புத் துணியால் மூடியபடி கத்திகள், பொல்லுகள் சகிதம் வீட்டுக்குள் நுழைந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று, வீட்டிலிருந்தவர்களை மிரட்டி,...

கரப்பந்தாட்டம் விளையாடியவர் மரணம்

திருநெல்வேலி, பாற்பண்ணைப் பகுதியில் கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தவர் திடீரென மரணமடைந்த சம்பவமொன்று, சனிக்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். திருநெல்வேலி, பாற்பண்ணைப் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் பிரகாஸ் (வயது 30) என்ற ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கரப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்த குறித்த நபருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, வாயிலிருந்து இரத்தம்...

சில்லறை வணிகர்கள், சிகரட் விற்பனை செய்ய தடை?

சில்லறை வணிகர்களால் சிகரட் உள்ளிட்ட புகையிலைபொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்வது குறித்து புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபான தொடர்பான தேசிய அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது. அதன் தலைவர் வைத்தியர் பாலித்த அபேகோன் இதனைத் தெரிவித்துள்ளார் இது தொடர்பான காரணிகளை தற்போது ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிகரட் பெட்டிகளில் 80 சதவீதமான பகுதியில்...

முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதிலுள்ள தடைகள் என்ன?

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பில் இருந்து விடுதலையாகியுள்ள முன்னாள் போராளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் இழுத்தடிப்புகள் இடம்பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு அவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் அரசு தடையேதும் விதித்துள்ளதா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்....

வற்வரி அதிகரிப்பு? சகல பொருட்களின் விலைகளும் உயரும்!!

வற்­வரி அதி­க­ரிக்­கப்­பட்­ட­தன்­மூலம் சகல பொருட்­களின் விலை­களும் அதி­க­ரிக்­கப்­படும். இதனால் சாதா­ரண பொது மக்­களே பாதிக்­கப்­போ­கின்­றனர் என தேசிய தொழிற்­சங்க முன்­ன­ணியின் தலைவர் சமன் ரத்­ன­பி­ரிய தெரி­வித்தார். வற் வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­வதன் மூலம் மக்­க­ளுக்கு ஏற்­ப­டப்­போகும் பாதிப்பு குறித்து வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் இது குறித்து தொடர்ந்து கூறு­கையில், அர­சாங்கம் அண்­மையில் வரி...

யோசித்தவுக்கு பிணை

சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படும் : இலங்கை மின்சார சபை

நாடளாவிய ரீதியில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. இந்த மின்வெட்டானது தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படுமென மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. நுரைச்சுாலை அனல் மின்நிலைய செயலிழப்பே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர் மின்தடைகளின் எதிரொலி- மின்சாரசபைத் தலைவர் பதவி விலகுகிறார்!

இலரங்கை முழுவதும் நேற்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பு சுமார் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்ததால், நாட்டின் சகல பகுதிகளும் இருளில் மூழ்கின. இதனையடுத்து இலங்கை மின்சாரசபையின் தலைவர் அநுர விஜயபால தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். ஆறு மாதகாலத்தினுள் மூன்று தடவைகள் நாடளாவிய ரீதியில் மின்துண்டிப்பு ஏற்பட்டமைக்கு பொறுப்பேற்று தனது பதவியை...

பாண் விலையும் 4 ரூபாவால் அதிகரிக்கும்?

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், பாணின் விலை அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 7 ரூபாய் 20 சதத்தால் நேற்று அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக 1 இறாத்தல் பாணின் விலை 4 ரூபாயால் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதிலும் மார்ச் 14ஆம் திகதி முதல் 20 ஆம்...

பிரபாகரன் யுத்தம் முடிந்த பின்னரும் உயிருடன் இருந்தாரா ? போர் விதிகளை மீறி கொல்லப்பட்டாரா?

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருந்தாரா? அவர் உயிருடன் பிடிபட்டாரா என்பது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்ச்சைகள் கிளம்பியிருக்கும் நிலையில் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான...

மோட்டார் சைக்கிள் குழு அட்டகாசம்! வாள்வெட்டில் சிறுவன் படுகாயம்!!

யாழ். நகருக்கு அண்மையாக தட்டார் தெரு சந்திக்கு அண்மையில் பாடசாலை சிறுவனை 12 பேர் கொண்ட குழு வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. நேற்று மதியமளவில் 8 மோட்டார் சைக்கிள்களில் வந்தோரே. மரக்காலையில் நண்பர்களுடன் நின்ற சிறுவனை வெட்டிக் காயப்படுத்தியது. இதில் க.ஹேமராஜன் (வயது 17) என்பவரே காயமடைந்தவராவார். குறித்த சிறுவன் மீது...

திடீர் மின் தடைக்கான காரணம் வௌியானது!

நேற்று பிற்பகல் அளவில் நாடுபூராகவும் தடைப்பட்ட மின் வழங்கள் நடவடிக்கைகள் தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதேவேளை, பியகம பகுதியிலுள்ள பிரதான ட்ரான்ஸ்போமரில் ஏற்பட்ட சேதமமே இவ்வாறு திடீர் மின் தடை ஏற்படக் காரணம் என தெரியவந்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் இது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை தாமதமின்றி கைவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை

எந்தவித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படாது முழுக்க முழுக்க சந்தேகத்தின் அடிப்படையில் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தனை இளைஞர்களையும் விடுவிக்கும் முயற்சிகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் என்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தாமதமின்றி கைவிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு...

சிங்கள மாணவர்களின் தாக்குதலின் எதிரொலி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு!

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவ பீட மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். சிங்கள மாணவர்களால், சித்த மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 9 தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு தகுந்த நீதி கிடைக்கும் வரை வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக வளாக முதல்வருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் மாணவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். சித்த மருத்துவ...

அளித்த வாக்குறுதியை 3 மாதங்களில் நிறைவேற்றுவேன்! தென்னிலங்கை கூச்சல்களுக்கு அஞ்சவில்லை!! யாழில் ஜனாதிபதி

வலி. வடக்கு மக்கள் தமக்கு சொந்தமான நிலத்தையே கேட்கிறார்கள். அவர்கள் எங்களிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்பை நிச்சயமாக நிறைவேற்றுவோம். 6 மாதங்களுக்குள் சொந்த நிலங்களில் குடியமர்த்துவேன் என நான் உறுதியளித்தேன். 3 மாதங்களில் ஒரு தொகுதி நிலத்தை விடுவித்துள்ளேன். மீதமிருக்கும் 3 மாதங்களில் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன். இவ்வாறு உறுதியளித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று சனிக்கிழமை...

காணி விடுவிப்பு நிகழ்வில் கடும் பாதுகாப்பு கெடுபிடி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பங்கேற்ற காணி விடுவிப்பு நிகழ்வில் இராணுவத்தினர் நேரடியாகவும் இரகசியமாகவும் பல பாதுகாப்புக் கெடுபிடிகளை விடுத்தனர். இதனால் இந்த நிகழ்வில் பங்கேற்ற மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியிருந்தனர். வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 750 ஏக்கர் காணிகளை விடுவித்து மீண்டும் மக்களிடம் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியில் இடம்பெற்றது....

முதல்வர் விக்கியும் அமைச்சர் சுவாமிநாதனும் காரசார விவாதம்! அதிகாரத் தொனியில் அடக்கினார் ஜனாதிபதி!!

வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் ஜனாதிபதி முன்னிலையில் மேடையில் காரசாரமாக விவாதித்துக் கொண்டனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அதிகாரத் தொனியிலான வார்த்தைகளால் இருவரையும் அடக்கினார். இந்த சுவாரஸ்யமான சம்பவம் நேற்று சனிக்கிழமை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயக் காணி விடுவிப்பு நிகழ்வின் மேடையில் இடம்பெற்றது. காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியை மக்களிடம்...
Loading posts...

All posts loaded

No more posts