விஜயகலா மகேஸ்வரன் யாழ் பாதுகாப்பு தலைமையகத்திற்கு திடீர் விஜயம்

மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ் பாதுகாப்பு தலைமையகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.

kala-army-1

அவர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவை நேற்று (17) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடக்கில் மீள்குடியேறியுள்ள மக்களின் நிலமைகள் மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள மயிலிட்டி, வலிவடக்கு மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதி மக்களின் மீள்குடியேற்றங்கள் பற்றி இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

வலி.வடக்கில் ஏனைய விடுவிக்கப்பட வேண்டிய இடங்களின் விபரங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டன​.

மேலும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அம்மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

kala-army-2

Related Posts