Ad Widget

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பொலிசார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர்.
paramalingamநேற்றைய தினம் இரவு பரமலிங்கம் தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீடுசெல்வதற்கு ஆயத்தமான போதே காரில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கையில் காயமடைந்த நிலையில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி பரமலிங்கம் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அது மாத்திரமன்றி கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து அப்போதைய பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளரான பிரிதி என்று அழைக்கப்பட்ட நடராஜா மதிதரன் ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts