Ad Widget

தமிழரசுக் கட்சிக்கு எதிரான மனுவை அனுமதிப்பதா.. இல்லையா? – தீர்ப்பு ஒத்திவைப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, அனுமதிப்பதா என்பது தொடர்பிலான தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாப்பு அரசியலமைப்பு வரையறைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரியே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எச்.கே.டி சந்திரசோம என்பவராலேயே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாப்பில் பிறிதொரு தேசம் கோரப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது அரசியலமைப்பை மீறும் செயல் என குறிப்பிட்டுள்ள அவர், அந்தக் கட்சியைத் தடைசெய்ய உத்தரவிடுமாறும் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனு இன்று (18) மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதிப்பதா இல்லையா என்ற தீர்ப்பை ஒத்திவைத்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts