- Saturday
- November 22nd, 2025
அரசியல் கைதிகளுக்கு எப்படியாவது தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிலர் முயற்சிப்பதாக, அரசியல் கைதிகள் விவகாரங்களை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றின் நீதிபதி ஐராங்கனி பெரேராவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பிணை வழங்கப்பட்ட 14 அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் தொடர்பில் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்து...
நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார். “30 ரூபாய் கொடுத்தால் போட்ல (boat) கொண்டு போய் நாகதீபவில்...
எமது மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவம் கையகப்படுத்தி, அதனை அனுபவித்து வருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி முழங்காவில் பிரதேசம் ஒரு சிறந்த...
யாழ்ப்பாணம் மீசாலை இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவரைக் கொலை செய்ததுடன், மற்றுமொரு இராணுவ சிப்பாயைச் சுட்டுக்கொல்ல முயற்சித்தமைக்காக இராணுவ புலனாய்வு பிரிவைச் இராணுவ கோப்ரல் ஒருவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 17 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளார். அத்துடன் 20 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டப் பணம் செலுத்தத் தவறினால்...
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் கிறிஸ்ஞானந்தராஜா மற்றும் கஜன் மாமா ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இவர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா...
சர்வதேச கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடனேயே போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற சரத் பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதை வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "போர்க்குற்ற விசாரணைகளின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களினது பங்களிப்பும், ஆலோசனைகளும் அவசியானது. இராணுவத்தினருக்கு...
இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில்...
ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பாராளுமன்ற அமர்வுகளின் போது, அரை மணிநேரம் பிரதமரிடம் நேரடியாக உறுப்பினர்கள் தமது கேள்விகளை கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
வடமாகாண தொண்டர் ஆசியர்களை, ஆசிரியர்கள் நியமனத்துக்குள் உள்வாங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தின் மூலம் மத்திய அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் பிரமாணக் குறிப்பை மீறி எம்மால் எதுவும் செய்ய முடியாது என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்தார். வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என கல்வி...
உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(09) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர்...
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், மீண்டும் இலங்கைக்கு வருவேன் என்று கூறிவிட்டு, இன்று (10) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறினார். இன்று அதிகாலை 3 மணியளவில், கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர், டுபாய் நோக்கிப்...
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரை, குற்றப்புலனாய்வு பிரிவினர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைது கைதுசெய்துள்ளனர். அவ்விருவரும் சட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். அவ்விருவரையும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் கருத்தறியும் செயலமர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 15...
வட மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (10) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா, மடு ஆகிய கல்வி வலயங்களில் சுமார் 10 வருடங்களாக கடமையாற்றுகின்ற தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரவை பத்திரம்...
யாழ்.மாவட்டத்தில் பயணிகள் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு சித்திரை மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக மீற்றர் பொருத்தப்படவேண்டும். என தெரிவித்திருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் என் வேதநாயகன், முச்சக்கர வண்டிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி உரிய தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம். எனவே உரிய நடைமுறை ஒழுங்குகளை சாரதிகள் பின்பற்றவேண்டும்....
வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் ஒன்றியம் எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைப்பின் ஆலோசகர் கிருஸ்ணபிள்ளை மனோகரன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அணுசரணையடன் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி முகாம்களில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். பாடி விருந்தினர்...
இலங்கை முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்படுவதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். நாடளாவிய ரீதியில் மோசடியில் ஈடுபட்டுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டும் நடவடிக்கையின் போதே மேற்படி தகவல்கள் பெறப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைப்பாடு தொடர்பாக...
எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.உலக சந்தையில் பாரியளவில் எரிபொருளுக்கான விலைகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அதன் நன்மைகள் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. எரிபொருள் விலை தொடர்பில் விலைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் என அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது. எனினும் நாட்டின் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக எரிபொருளுக்கான விலைகளை...
காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாவர். ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்து விட்டனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் எவரும் காணாமல் போகவில்லை. வடக்கில் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தெரியும். விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தில்...
முல்லைத்தீவு- கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமான நிலங்களை இராணுவத்தினரிடமிருந்து மீட்டு மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண சபையின் 45ஆவது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றய தினம் வடமாகாண சபையின் 45ஆவது அமர்வு நடைபெற்றிருந்த நிலையில் மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி பிரேரணையினை சபையில் முன்மொழிந்திருந்தார். குறித்த பிரேரணை...
Loading posts...
All posts loaded
No more posts
