- Saturday
- November 22nd, 2025
யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை செய்துள்ளார். யோதிலிங்கம் துசன் என்ற 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லூர் வடக்கு விநாயகர் வீதியைச் சேர்ந்த குறித்த முன்னாள் போராளி குடும்ப பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு போதுமான தொழில் வாய்ப்பின்றி இருந்ததாக...
யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருத்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு...
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலையில் 70 அத்தியாவசிய மருந்துப் பொருள் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக மருந்துப்பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. புற்று நோய், சிறுநீரக நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கான 70 வகை அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக...
யோஷித ராஜபக்ஷவின்வின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கும் தீர்ப்பை நீதிவான் தம்மிக ஹேமபால நேற்று அறிவித்த போது மன்றில் இருந்த ஷிரந்தி ராஜபக்ஷ கண்ணீர் விட்டு அழுதார். மஹிந்த ராஜபக்ஷவின் கண்களும் கலங்கியிருந்தன. கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் லெப்டினன் யோஷித ராஜபக் ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள்...
தனது தந்தையின் பதவி நிரந்தரமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி இருந்தன. தந்தைக்கு இணையாக அவரது மகள் சத்துரிக்கா, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தனது தந்தையின் ஜனாதிபதி பதவி நிரந்தரமில்லை என்று...
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனிடம், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களின் தூதுக்குழுக்கள் எவ்வாறான உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர் என்று எனக்குத் தெரியும் என்று, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர், நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நாட்டையும்...
காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு யாழ்.குடாநாட்டில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27, 28, 29 ஆம் திகதிகளிலும், மார்ச் முதலாம் திகதியும் சாட்சி விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச தெரிவித்துள்ளார். கோப்பாய், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, சாவகச்சேரி, காரைநகர்...
மேல் மாகாணம் உட்பட டெங்கு பாதிப்புள்ள 7 மாவட்டங்களில் இரு நாள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்றுமுதல் (11) ஆரம்பமாகியுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, கேகாலை, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு, குருணாகல, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாண்டு ஆரம்பம் தொடக்கம் இன்று வரை டெங்கு நோயாளர்களின்...
பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான இறக்குமதி தீர்வை 35 ரூபாவிலிருந்து கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் விதத்தில் அரிசி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. 2015/2016...
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அடங்கிய குழுவினர், நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தனர். அங்கு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ள அவர்கள், அங்குள்ள மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அங்கு மேற்கொள்ளப்படும் வீடமைப்பு, மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்ற நிலைமைகள் குறித்தும் அவர்கள் நேரில் சென்று கேட்டறிந்துள்ளனர்....
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது சிவில் சமூக அமைப்புகளுடான சந்திப்பிலும், அரச அதிகாரிகளுடான சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார். நாட்டின் அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களை பார்வையிடும் நோக்கில் வெளிவிவகார அமைச்சரின் யாழ் விஜயம் அமைந்திருந்தது.
வெலிகடைச் சிறைச்சாலையில் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைக்கும் சிறை அறைகள் சில தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தடுத்து வைப்பதற்காக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறை அறை தயார் செய்யப்பட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில்...
ஜோதிடத்தை நம்பி ஆட்சியை இழந்த மகிந்த ராஜபக்ச மீண்டும் பதவியேற பல்வேறு பகீரத பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என அடிக்கடி புகைப்பட ஆதாரங்களோடு செய்திகள் வௌவந்து கொண்டிருக்கின்றன. இதன் பொருட்டு இழந்து போன தனது அதிகாரத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக தலைகீழாய் தவமிருப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் முன்னர் வெளியாகியிருந்தன. இந்நிலையில்,...
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி வருகிறது. அதற்கு முன்னதாக வரும் 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக(விரதம்) கடைபிடித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் புதன்கிழமை அன்று...
இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் திலக்கரத்ன டில்சானுக்கு, கொழும்பு நீதிபதி நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சினையொன்றுக்காக அவரது முதலாவது மனைவியினால் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது டில்ஷான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதனையடுத்து பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டில்ஷான் வெளிநாட்டில் இருப்பதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தபோதும், அவர்...
சரத் பொன்சேகாவின் படைகள் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அவரை இலங்கை அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளமையானது, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு நேர்மறையானது என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. சரத் பொன்சேகாவின் இந்த நியமனமானது பரந்தளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் சிரேஷ்ட இராணுவத் தலைவர்களை அரசாங்கம் பாதுகாக்கலாம்...
சி.எஸ்.என். தொலைக்காட்சி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ, புதல்வர் நாமல் ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும்...
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் ரூபா 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முழங்காவில் பேரூந்து நிலையம் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. முழங்காவில் பிரதான பேரூந்து நிலையத்தை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நேற்று காலை 8.30 மணியளவில்...
யாழ். மாவட்டத்தில் முதன்முறையாக 9ஆவது தேசிய சாரணர் ஜம் போறி எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகி 5 நாட்கள் நடைபெறவுள்ளது.வடமாகாண கல்வி அமைச்சில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இவ்வாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தின் சாரணியர் ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு பெறுவதனை முன்னிட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி...
இவ் வருட ஆரம்ப கட்டத்திலேயே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 26 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என, சுகாதார அமைச்சின் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்புப் வேலைத் திட்டப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஆண் ஓரினச் சேர்க்கை மூலம் எயிட்ஸ் பரவுவது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொழும்பு...
Loading posts...
All posts loaded
No more posts
