வேலையற்ற பட்டதாரிகளால் சங்கத்தினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வேலையற்ற பட்டதாரிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் வீச்சு தாக்குதலை நடாத்தி ஆர்ப்பாட்டத்தை கலைத்திருந்தனர்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டன தெரிவிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து வேலையற்ற பட்டதாரிகளாலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஆர்ப்பாட்டமானது இன்று காலை 10 மணியளவில் யாழ் நல்லூர் ஆலய முன்றலில் இடம்பெறும் என வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர்.