Ad Widget

யாழ்ப்பாணத்தில் மங்கள சமரவீர முன் ஆவேசமாகப் பேசிய மூத்த இராணுவ அதிகாரி!

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்தவாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது, இராணுவத்தின் கீழ்ப்படியாமை நிலையை நேரடியாக எதிர்கொள்ள நேரிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வழமையாக பதற்றமடையாத மங்கள சமரவீர சிரேஸ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாகி கலகே தெரிவித்த ஆவேசமான கருத்துக்களால் அதிர்ச்சியடைந்தார்.

saggi-gallage-army

படையணியொன்றின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாகி கலகே சீற்றத்துடன் கூடிய கருத்துக்களை வெளியிட்ட வேளை இராணுவத் தளபதி, மற்றும் பாதுகாப்புச் செயலாளரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு முரணாக இராணுவ அதிகாரியொருவர் கருத்து தெரிவித்ததற்கான காரணம் என்னவென்பது உடனடியாக தெரியவராத போதிலும் அமைச்சர் இது குறித்து எவரிடமும் முறைப்பாடு செய்யவில்லை.

எனினும் இராணுவத் தலைமையகம் உடனடி நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பிட்ட இராணுவ அதிகாரி உடனடியாக கொழும்பிற்கு இடமாற்றப்பட்டார். மேஜர் ஜெனரல் சhகி கலகே முன்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் முன்னோக்கி நகர்வதில் ஆர்வம் காட்டிவரும் வேளையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் விசுவாசம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதியை ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளமை எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி யுத்தகுற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் விரும்புவதை வெளிப்படுத்தியுள்ளது.

விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதி யுத்தத்திற்கு தலைமை தாங்கிய பொன்சேகா யுத்த குற்றங்களிற்காக எந்த சர்வதேச நீதிமன்றத்தையும் எதிர்கொள்ள தயார் என தெரிவித்து வருகின்றார். யுத்த குற்றவிசாரணையை எதிர்கொள்ளும் அதேவேளை யுத்தவெற்றிக்கும் தானே காரணம் என உரிமைகொண்டாட கூடிய சரத் பொன்சேகாவை பயன்படுத்தி யுத்த குற்ற விசாரணைகளிற்கு வரும் எதிர்ப்பை சமாளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Related Posts