ஒரு இறாத்தல் பாணின் விலையானது நான்கு ரூபாவினால் குறையும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைத் திட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் வாரம் காரணமாகவே பாணின் விலையை குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விலை குறைப்பானது குறிப்பிட்ட ஒரு வாரத்திற்கு மட்டும் அமுலில் இருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.