வித்தியா படுகொலை வழக்கும் துரிதப்படுத்தப்பட வேண்டும்

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனிடம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 2015 மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணம், புங்குடுதீவு பாடசாலை மாணவி...

சங்கானை வைத்தியர் தொடர்பில் மக்கள் விசனம்

வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள சங்கானை வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் தனியாக கிளினிக் நடத்துவதால் பெரும்பாலான நேரங்களில் வைத்தியர் வைத்தியசாலையில் இருப்பதில்லையென பொதுமக்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். 'போதிய வைத்தியர்கள் மற்றும் வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் சங்கானை வைத்தியசாலைக்கு அதனைச் சூழவுள்ள பெருமளவான மக்கள் சிகிச்சைக்காக நாளாந்தம் செல்கின்றனர். அங்கு சிகிச்சைக்கு செல்பவர்களில் சிறிதளவு தொகையினரையே...
Ad Widget

தப்ப முயன்ற பொட்டு அம்மானுக்கு என்ன நடந்தது எனத் தெரியாது!-பொன்சேகா!!

இறுதி யுத்தம் நடந்த சமயம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோர் சிலருடன் தப்ப முயன்றனர். 2009 மே 17 ஆம் திகதி வடக்கு நந்திக்கடலூடாகத் தப்ப முயன்ற இவர்களில் பிரபாகரனும் மற்றவர்களும் திரும்பி யுத்த களத்துக்கு வந்தனர். ஆனால் பொட்டு அம்மான் வரவில்லை. இந்த விடயத்தை கே.பி....

யாழ். நகரை அபிவிருத்திசெய்ய அமைச்சரவை ஒப்புதல்!

யாழ்ப்பாணம் நகரை அபிவிருத்தி செய்வதற்காக பெரு நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இணை அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக இவ்வாறு...

ஆடை ஒழுங்கு : கலைப்பீட மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கைக்கு பெண் மாணவர்கள் பதில் அறிக்கை

பெண் மாணவர்கள், கலைப்பீடம், யாழ் பல்கலைக்கழகம். 11.03.2016 தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழகம். கண்டன அறிக்கை கடந்த வாரம் (03. 03.2016 ) இடம்பெற்றதாகக் கூறப்படும் கலைப்பீட மாணவர் ஒன்றியக் கூட்டத்தில் ஏற்கனவே கலைப்பீட பீடாதிபதியினால் கொண்டு வரப்பட்டு பின்னர் மீளப்பெறப்பட்ட ஆடைக்கட்டுப்பாடு தொடர்பான சுற்று நிருபத்தினைப் பின்பற்றப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்...

சிங்கப்பூர் வீடுகள் வடக்கிற்கு பொருத்தமுமில்லை, அவசியமுமில்லை!

21இலட்சம் வீட்டிற்கு பலத்த எதிர்ப்பு உண்டு. மக்களை பொறுத்த வரையில் இந்த வீட்டின் சூழல் நிலையை எங்களுடைய மக்கள் முழுமையாக பார்க்கும் போது அதனை ஏற்கமுடியாது. வீடில்லாத குடும்பத்திற்கு இந்த வீட்டைக் கையளித்து ரி.வி, கட்டில் கொடுத்தால் சரி என்று சொல்லக்கூடும். ஆனால் சமுதாயத்தில் என்ன நடக்கும். ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுத்தும் நிலையை தோற்றுவிக்கும். என...

மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திய கணவன் கைது

மனைவியின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்தியதுடன், மனைவியின் தலைமுடியையும் வெட்டி வீசிய கணவனொருவரை, 3 மாதங்களில் பின்னர், அச்சுவேலி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், புதன்கிழமை (16) இரவு கைது செய்தனர். வல்வெட்டித்துறை பகுதியினை சேர்ந்த மேற்படி சந்தேகநபர், உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையில் சிலகாலமாக...

ஆலோசனைக்கு அமைய பணியாற்றாவிடின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

யாழ். மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை அதிகாரிகள் மாவட்ட செயலாளர், முதலமைச்சர், ஆளுநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கு அமையவே பணியாற்ற வேண்டும். இல்லையேல் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் பஸ், போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைந்த நேர அட்டவணை...

கிளிநொச்சியில் 3 மாணவர்களைக் காணவில்லை

கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மூவரைக் காணவில்லை என, அம்மாணவர்களது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற மேற்படி மூன்று மாணவர்களும், நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களால் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனையடுத்தே, சம்பவம்...

வடமாகாண முதலமைச்சருடன் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

அரசாங்கம் பல நன்மைகளை செய்து வந்தாலும், இராணுவம் இருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ்ஸி ஜோன் ஹட்சசனுக்கு (Bryce Hatcesson) இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். சுமார் 1 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர்...

இன்று மின் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பலாம்!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது செயற்படுத்தப்படுவதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று மாலையளவில் 600 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக, இலங்கை மின்சாரசபைத் தலைவர் அனுர விஜயபால தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யின், இன்று மாலை மின் வெட்டு இன்றி, முழுமையான மின்சாரத்தை...

இந்திய அதிகாரிகள் குழு பலாலி விமானநிலையத்தில் ஆய்வு!!

பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து அதிகாரிகள் குழுவொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. அண்மையில் பலாலி விமான நிலைய விரிவாக்கம் தொடர்பில் இந்திய – இலங்கை ஆணைக்குழுத் திட்டத்தில் இணக்கம் காணப்பட்டு அதன்படி விரைவில் இதுதொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து குழுவொன்று இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்தே இக்குழுவினர் நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்ததாகவும்,...

மக்களை ஏமாற்றும் மோசடிக்கும்பல்

மலேஷிய உட்பட வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெறும் மோசடிக்கும்பள்களிடம் ஏமாற வேண்டாமென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு மலேஷியாவில் தொழில் பெற்றுத் தருவதாக ஏமாற்றிய இருவர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும்...

ஈழத் தமிழர் காலைகளை முறித்த காவல் அதிகாரி!

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் சுபேந்திரன் என்னும் ஈழத்தமிழ் அகதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறான் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல் துறை ஆய்வாளரும் உடன் இருந்த காவலர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தை நம்பி தஞ்சம்...

 மண்வெட்டித் தாக்குதலுக்குள்ளான பெண் உயிரிழப்பு

காரைநகர் கல்வன்தாழ்வு பகுதியில் கடந்த 4ஆம் திகதி மண்வெட்டி தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னத்துரை தவமணிதேவி (வயது 56) என்பவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (14) இரவு உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இவரைத் தாக்கிய, இவரது சகோதரியின் கணவர் தலைமறைவாகியுள்ளார். மேற்படி பெண்ணுக்கும், அவரது தங்கையின் கணவருக்கும் இடையில்...

போலியான பிரசாரங்களை மேற்கொள்ளும் பேஸ்புக்காரர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை!

முகநூல் ஊடாக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் போலிப்பிராசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும், இவ்வாறான 50 முகநூல் கணக்குகளின் தகவல்களை விரைவில் வெளியிடப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலாங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத்...

கிரிக்கட் வீரர் கொலை வழக்கு: 3 எதிரிகளுக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை! ஏழாம் எதிரிக்கு சர்வதேச பிடிவிறாந்து!!

யாழ்ப்பாணம் செங்குந்தா மைதான கிரிக்கட் வீரர் கிறிஸ்தோபர் பிரேமன் கொலை வழக்கில் 3 எதிரிகளுக்கு தலா 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தபட்ட ஏழு எதிரிகளில் முதலாம், இரண்டாம், ஏழாம் எதிரிகளான அருளானந்தம் சோபஸ், இராஜகுலேந்திரன் நிசாந்தன், உமாகாந்தன் கிரிகேசன் ஆகிய மூவருக்குமே இவ்வாறு...

வடமாகாண மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

நீதியும் சட்டமும் என்ற கோட்பாட்டில் இலங்கை, இந்தியா ஆகிய இருநாடுகளும் மீனவர்களுக்கான தீர்வினை பெற்றுகொடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொள்வது தொடர்பாக வடமாகாண மீனவ சம்மேளனத் தலைவர்கள், கிராம அமைப்புகள், மீனவ சங்க பிரதிநிதிகளுடான சந்திப்பு ஒன்று...

மன்னாரில் ஒரு கோடி 87 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு

மன்னார் - முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாபத்துறை பகுதியில் செவ்வாய்கிழமை (15) காலை ஒருகோடி 87 லட்சம் ரூபா பெறுமதிமிக்க கேரளா கஞ்சாவிணை மன்னார் மது வரி திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். சிலாவத்துறையில் 56 வீட்டு திட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள. கடற்கரையை அண்டிய சிறு ஓடையில் நிலத்துக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 187 கிலோ கிராம்...

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் உள்ளிட்ட குழு யாழில்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரைஸ் ஹட்டக்சன் மற்றும் அவரது குழுவினர் நேற்று புதன்கிழமை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். நேற்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். அதன்பின்னர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ். மாவட்ட...
Loading posts...

All posts loaded

No more posts