Ad Widget

சமஸ்டி நாடுகள் பிரிந்து செல்லவில்லை!- முதலமைச்சர்

சமஸ்டி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் எதுவும், பிரிந்து செல்லவில்லை, இணைந்தே இருக்கின்றன. தென்னிலங்கை அரசியல்வாதிகளே சமஸ்டி என்றால் பிரிவினை என அர்த்தப்படுத்தி வந்துள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கனடாவில் கியூபெக் என்று பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசம் உள்ளது. அவர்கள் கனடாவை விட்டு பிரிந்து செல்லவில்லை. வாக்கெடுப்பிலும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எங்கெல்லாம் சமஸ்டி உள்ளதோ அங்கெல்லாம் மக்கள் பிரிந்து செல்லவில்லை. ஸ்கொட்டலாந்து மற்றும் சுவிற்சர்லாந்து முதலிய நாடுகளிலும் இந்த முறை காணப்படுகிறது. இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு உரிமையை கொடுத்தால் பிரிந்துவிடுவார்கள் என்றொரு கருத்து உள்ளது.

சிறுபான்மை மக்களின் உரிமையை கொடுத்துப் பாருங்கள்- அவர்கள் உங்களுடன் சேர்ந்திருப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts