Ad Widget

யாழ்.மாவட்டத்தில் போதைவஸ்து பாவனை அதிகரிப்பு

யாழ். மாவட்­டத்தில் போதை­வஸ்துப் பாவனை அதி­க­ரித்து வரு­கின்­றது. குறிப்­பாக தீவ­கத்தில் அதன் பயன்­பாடு அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு விசேட கவனம் செலுத்தி விழிப்பு குழுக்கள் நிய­மித்து செயல்­பட வேண்டும் என யாழ். மாவட்ட ஒருங்­கி­ணைப்பு குழுவின் தலை­வர்­களில் ஒரு­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை­ சே­னா­தி­ராசா தெரி­வித்தார்.

வேலணை பிர­தேச செய­ல­கத்தின் ஒருங்­கி­ணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று முன்­தினம் நடை­பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

யாழ். மாவட்­டத்தில் போதை­வஸ்துப் பாவனை அதி­க­ரித்து வரு­கின்­றது. குறிப்­பாக தீவ­கத்தில் பாவனை அதி­க­ரித்து காணப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. இதன் தாக்­கமே புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொ­லைக்­கான பின்­னணி என்­பதை நாம் அறிந்­துள்ளோம்.

தீவுப்­ப­கு­தியில் அதி­க­ள­வான துறை­மு­கங்கள் இருப்­பதால் அப்­ப­கு­தியில் போதை­வஸ்து பொருள் விநி­யோக நட­வ­டிக்கை அதி­க­மாக உள்­ளது. இதனால் பாட­சாலை மாண­வர்கள் பாதிக்­கப்­பட்டு வரு­கி­றார்கள். இது நிறுத்­தப்­ப­ட­வேண்டும். இங்கு யாரையும் குற்றம் சொல்­வ­தற்­கல்ல. தனியே ஒரு­வரால் மட்டும் இதனை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. எனவே அனை­வரும் இணைந்து போதை­வஸ்துப் பாவனையை கட்­டுப்­ப­டுத்த ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும் எனத் தெரி­வித்தார்.

இதே­வேளை, போதை­வஸ்து பாவ­னையை கட்­டுப்­ப­டுத்த பிர­தேச செயலர் தலை­மையில் ஒவ்­வொரு கிரா­மங்கள் ரீதி­யாக விழிப்புக் குழுக் கூட்டங்கள் உருவாக்குவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts