Ad Widget

சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் உள்ளதா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது

இறுதிக்கட்டப் போரில் காணாமல் போனவர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு இராணுவம் பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

இறுதிக் கட்ட யுத்ததில் இராணுவத்தின் 58 ஆவது படைப் பிரிவில் சரணடைந்து காணாமல்போனவர்கள் என தெரிவிக்கப்படும் நபர்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இராணுவப் பேச்சாளர் இது தொடர்பில் குறிப்பிடுகையில், உண்மையில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் ஒன்று 58 ஆவது படை பிரிவின் தலைமை காரியாலயத்தில் உள்ளதா இல்லையா என்பது குறித்து எனக்கு தெரியாது.

எவ்வாறாயினும் நீதிமன்றம் ஊடாக இது தொடர்பில் விசாரணை ஒன்று இடம்பெற்று வரும் நிலையில் அந்த விசரணைக்ளுக்கு இராணுவம் பூரணமான தனது ஒத்துழைப்பை வழங்கும். காணாமல் போனவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் இராணுவம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் 58 ஆவது படைப் பிரிவில் சரணடைந்தவர்கள் தொடர்பில் நீதிமன்றில் விசாரணை ஒன்ரு இடம்பெற்றுவருவதால் அது குறித்த மேலதிக தகவல்களை வெளிப்படுத்துவது பொருத்தமாக அமையாது என்றார்.

Related Posts