Ad Widget

வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மேலும் சில பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை!

யாழ் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் 25 வருடங்களாக இயங்காமல் இருந்த நடேஸ்வராக் கல்லூரி உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் அதனை அண்டிய சில பகுதிகளில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவிக்கின்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு போர் காரணமாக வலி வடக்கு பிரதேசங்களில் இருந்து மக்கள் வெ ளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் போர் தீவிரமடைந்தமையினால் மேற்படி மக்களுடைய நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு படையினரால் பயன்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் போர் முடிவடைந்த பின்னர் தங்களுடைய நிலங்களில் தங்களை மீள் குடியேற்ற வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள்ளிருந்து சில பகுதிகள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும் நடேஸ்வராக் கல்லூரி ஆலயங்கள் பாடசாலைகள் தேவாலயங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்தது. எனவே தங்களுடைய பிரதேசங்களை விடுவிக்க வேண்டும் என்ற மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு அமைவாக இப் பிரதேசம் மீள்குடியேற்றத்திற்கு அனுமதியளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இனிவரும் அடுத்த வாரங்களில் இப்பிரதேசம் பொதுமக்களிடம் கையளிக்கப்படலாம் என மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts