ஜேர்மன் அதிபரை சந்தித்தார் ஜனாதிபதி

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மனி சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (17) ஜேர்மனி அதிபர் கலாநிதி அஞ்சலா மெர்கலைச் சந்தித்தார்.

german-

ஜேர்மனி அதிபருடைய அலுவலகத்திற்கு வருகைதந்த ஜனாதிபதிக்கு அணிவகுப்புடன் கூடிய பெரு வரவேற்பு வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையினைத் தொடர்ந்து இரண்டு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது.

இலங்கையின் அரச தலைவர் ஒருவர் 15 வருடங்களின் பின்னர் ஜெர்மனிக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு தரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் அரச தலைவர்கள் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் அபிவிருத்திக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அஞ்சலா மேர்க்கல் இதன்போது குறிப்பிட்டுள்ளார். திறன் அபிவிருத்தி, தொழில்நுட்பம் மற்றும் சுகாதார மேம்பாட்டிற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts