Ad Widget

கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியது!!

“project loon” என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டன.

google_baluin04

இப்பரிசோதனையில் பயன்படுத்தப்பட இருக்கும் மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக நேற்று முந்தினம் காலை இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது அனைவரும் அறிந்ததே.

விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமான வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஆகாயத்திலேயே நிலை கொண்டிருக்கும் இந்த பலூன் வான் வெளியில் பழுதடைந்து மலையகத்தின் புஸ்சல்லாவ பகுதியில் விழுந்துள்ளதாகவும், எராளமான மக்கள் அதனைகாண அங்கு குவிந்துள்ளனர்.

மறுசுழற்சி செய்ய முடியுமான இந்த பலூன்கள் 180 நாட்கள் வரையிலான ஆயுளையே கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts