விரைவில் கிராம அலுவலர்கள் சமாதான நீதவானாக நியமிக்கப்படுவர்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கொள்கைக்கு அமைவாக கிராம அலுவலர் சேவையின் வினைதிறனை விரிவுபடுத்துமுகமாக நாடு பூராக சேவையற்றும் கிராம அலுவலர்கள் சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.

பிரதேச செயலர் பிரிவு ரீதியாக இதற்கான தகவல்கள் திரட்டப்படுவதாக தெரியவருகின்றது. கிராம அலுவலர்களின் பெயர் விவரம், கடமைப்பிரிவு, நியமனக்காலம், சேவைக்காலம், பதவியை உறுதிப்படுத்தல், ஒழுக்காற்று, நடவடிக்கைகள் போன்ற தகவல்கள் எடுக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் கிராம அலுவலர்கள் அனைவரும் சமாதான நீதவானாகக் கடமையாற்றிய போதிலும் பின்பு இந்தக்கடமை இடைநிறுத்தப்பட்டது. அவ்வாறு கடமையாற்றியிருப்பின் அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட இலக்கமும் அந்தத் தகவல் திரட்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான இந்த நியமனத்தின் மூலம் பொதுமக்கள் தமது பல்வேறு தேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும் என தெரிவிக்கின்றனர்.

Related Posts