Ad Widget

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் வெளிநாட்டில் கருத்துக்கணிப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியலமைப்புத் தொடர்பில் பொதுமக்களின் கருத்தக்களைச் சேகரித்து வரும் குழு, தெரிவித்தது.

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில், இதுவரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் தங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அக்குழு, இந்த கருத்துக்களைச் சேகரிக்கும் பணிகள், மார்ச் மாதம். முழுவதும் முன்னெடுக்கப்படும் எனவும், ஏப்ரல் மாதத்தின் இறுதிக்குள், அது தொடர்பான அறிக்கை, அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அக்குழு கூறியது.

இதேவேளை, அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் எழுத்து மூலமாக யோசனைகளை வழங்கும் நடவடிக்கை, எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts