“எங்கள் இனத்துக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை அவர்களின் நினைவிடங்களில் நினைவுகூர புதிய அரசமைப்பில் வழிசெய்ய வேண்டும்.”- இவ்வாறு யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடந்த ‘புதிய அரசமைப்பு தொடர்பில் பொதுமக்களின் யோசனைகளை அறியும் குழு’வுக்குத் தகவல் அளித்தார் பொதுமகன் ஒருவர்.
புதிய அரசமைப்பில் தமிழ் மக்களுக்கு சமஷ்டி மூலமான தீர்வே அவசியம். எங்களின் தாயகமான வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். அதில் எங்களை நாங்களே ஆட்சி செய்ய வேண்டும்.
எங்களின் உரிமைகளுக்காக உயிர் நீத்த மாவீரர்களின் நினைவிடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. அவற்றை மீளவும் அதே இடங்களில் அமைத்து அவர்களை நினைவுகூர புதிய அரசமைப்பில் வழி ஏற்படுத்தப்பட வேண்டும் – என்று அவர் இதன்போது மேலும் கூறியிருந்தார்.