Ad Widget

மனதில் பொறாமைத் தீ மூளாமல் இருக்க விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன – பொ.ஐங்கரநேசன்

மற்றவர் வளர்ச்சி கண்டு மனதில் பொறாமைத் தீ மூளாமல் இருக்க விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (12.02.2016) இடம்பெற்ற வருடாந்த மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு உரையாற்றும்போது,

வெற்றி தோல்விகளைச் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். அடுத்தமுறை எம்மால் இன்னமும் சிறப்பாகச் செய்யமுடியும் என்று நினைத்தால் தோல்வி மனப்பாங்கு இல்லாமல் போய்விடும். தோல்வி மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் அடுத்தவர் வெற்றியையோ வளர்ச்சியையோ பார்த்துப் பொறாமை கொள்ள நேரிடும்.

மற்றவர் வளர்ச்சி கண்டு மனதில் பொறாமைத் தீ மூளாமல் இருக்க விளையாட்டுப் போட்டிகள் உதவுகின்றன. விளையாட்டுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை மாத்திரம் வழங்குவதில்லை. நற்பண்புகளையும் கற்றுத்தருகின்றன. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது ஒவ்வொருவரும் தாம் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கின்றனர். குழுப்போட்டிகளில் ஈடுபடும்போது நான் என்பது மறைந்து நமது குழு வெற்றிபெற வேண்டும் என்ற மனப்பாங்கு வளர்கிறது. பாடசாலையில் மாணவர்களுக்கிடையில் இல்லங்களுக்கிடையில் போட்டி மனப்பான்மை நிலவினாலும் பாடசாலைகளுக்கிடையான போட்டிகள் என்று வரும்போது வேறுபாடுகள் மறந்து எமது பாடசாலை வெற்றிபெற வேண்டும் என்று மனம் அவாவுறுகிறது. இத்தகைய விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களிடையே கூட்டாக இயங்கும் மனப்பாங்கைத் தோற்றுவிக்கும். கூட்டு மனப்பாங்கு தோல்வி உணர்வை இல்லாமல் செய்து வெற்றியில் நானும் பங்காளன் என்ற உணர்வைத் தோற்றுவிக்கும். இந்த உணர்வு தனிமனித ஆளுமை விருத்திக்கும், சமூக வளர்ச்சிக்கும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

07 (1)

07

08

09

10

11

04

05

01

Related Posts