Ad Widget

ஒரே மேடையில் ஒன்றுகூடுகின்றனர் சந்திரிகா, ரணில், அனுரகுமார, பொன்சேகா!

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து அதிகாரப் பகிர்வினூடாக நாட்டை முன்னேற்றிச் செல்ல ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளன. (more…)

ஜனாதிபதி தேர்தல் குறித்த த.தே.கூ.வின் தீர்மானம் தாமதம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் தீர்மானமெதுவும் எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது. (more…)
Ad Widget

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். (more…)

தமிழர்களை முட்டாளாக நினைக்கிறது ஈ.பி.டி.பி: சரவணபவன் எம்.பி

தமிழ் மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பு ஈ.பி.டி.பி நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணத்தில் இருப்பதுடன் தமிழ் மக்களை பின்னடையச் செய்வதற்கான வழிவகைகளையும் அவர்கள் செய்கின்றனர். (more…)

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க 2வார கால அவகாசம்

இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்கள் இரண்டு வாரங்களுக்குள் பெறமுடியுமென ஆட்பதிவுத்திணைக்களம், நேற்று (07) அறிவித்துள்ளது. (more…)

மகேஸ்வரனை புலிகள் சுட்டுக்கொன்றனரா?

எனது கணவர் மகேஸ்வரனை புலிகள் சுட்டதாகக் கூறும் நீங்கள் அப்போது பக்கத்தில் இருந்தீர்களா என்று அமைச்சர் ரோஹித அபே குணவர்தனவிடம் கேள்வி எழுப்பினார் ஐ.தே.கவின் விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. (more…)

பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதிகளில் அதிகரிக்கும் படையினர் நடமாட்டம்

யாழ்.பல்கலைக்கழகத்தினை சூழவுள்ள பகுதிகளில் படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

ஐநா விசாரணை : இலங்கையைச் சாடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையர்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் புலன்விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் (more…)

இலங்கையை எச்சரிக்கிறது அமெரிக்கா!

ஐக்கிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களை மௌனமாக்க முனையும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. (more…)

வடக்கு பயணத் தடை அடிப்படை உரிமை மீறல்

இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெறாமல் வடக்குப் பிராந்தியத்துக்கு வெளிநாட்டுப் பிரஜைகள் செல்வதில் உள்ள தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய முடியும் (more…)

கணவரை இராணுவத்தினர் ஏற்றிச்செல்லும் புகைப்படம் வீரகேசரியில் பிரசுரமாகியுள்ளது

இறுதி யுத்­தத்­தின்­போது பொது மன்­னிப்பு வழங்­கப்­ப­டு­மென இரா­ணுவம் அறி­வித்­த­தற்கு அமைய ஒப்­ப­டைக்­கப்­பட்ட தனது கண­வரை தற்­பொ­ழு­து­வரை காண­வில்லை எனவும் இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்­த­பின்னர், வாக­னத்தில் ஏற்றிச் செல்­லப்­ப­டு­கின்ற புகைப்­ப­ட­மொன்று (more…)

நிவாரண பொருட்கள் சேகரிப்பதை நிறுத்தவும் – மாவட்ட செயலாளர்

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலம் அதிகளவான நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக (more…)

நாட்டு மக்களை முட்டாள்களாக்கி வரவு – செலவு திட்டம் சமர்ப்பிப்பு! – சுரேஸ்

2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் நாட்டு மக்கள் எல்லோரையும் முட்டாள்களாக்குவதற்கான முன்மொழிவே தவிர நாட்டையோ, மக்களையோ முன்னேற்றுவதற்கானதல்ல. -இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன். (more…)

ஈ.பி.டி.பி.யின் ஆதரவு ஜனாதிபதிக்கே

எமது மக்களின் சார்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையுடன், நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கே ஆதரவு வழங்குவதென ஈ.பி.டி.பி. முடிவு செய்துள்ளது. (more…)

கூட்டமைப்புடன் கூட்டொப்பந்தம் இல்லை – அரசு

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கூட்டொப்பந்தமொன்றை அரசாங்கம் செய்துள்ளது என்ற குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் நேற்று அரசாங்கம் மறுத்தது. (more…)

நாடு கடத்தப்பட்ட எச்.ஐ.வி. தொற்றாளர்கள் 40பேர் யாழில் வசிக்கின்றனர்!!

எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான நாற்பது இலங்கையர்களை சில நாடுகள் நாடு கடத்தியுள்ளது. (more…)

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் வட மாகாணம் செல்ல புதிய நடைமுறை!

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் (foreign passport holders) வட மாகாணத்தின் சில பிரதேசங்களுக்குச் செல்வது பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பயணம் செய்பவர்கள் அரச மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அனுமதி பெற்றுகொள்ள வேண்டும். (more…)

வடக்கில் ரூ.100 மில்லியன் ஊழல்: சுரேஸ் குற்றச்சாட்டு

வடமாகாணத்தில் 100 மில்லியன் ரூபாவை, நெல்சிப் திட்டத்தில் பணியாற்றிய பொறியியலாளர் ஒருவர் ஊழல் செய்துள்ளார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் கூறியதாவது, 'உலக...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய கூட்டமைப்பு அழைப்பு

பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைத்து தமிழ் மக்களும் முன்வரவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. (more…)

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனம் உதவி

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவக்குழு உள்ளடங்கலாக 10 பேர் கொண்ட உதவிக்குழு வெள்ளிக்கிழமை (31) பதுளை பிரதேசத்திற்கு செல்லவுள்ளதாக சிவன் மானுட மேம்பாட்டு நிறுவன தலைவர் இ.கலியுகவரதன் இன்று வியாழக்கிழமை (30) தெரிவித்தார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts