Ad Widget

மாற்றத்துக்காய் வாக்களித்தோம் மாற்றுவீரா எம் வாழ்வை?

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி, முல்லைத்தீவு மாவட்டப் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் முல்லைத்தீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

காணாமல் போனோரை கண்டுபிடிக்க கோரியும், கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் முன்பாக இன்று முற்பகல்10 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் சேர்ப்பிக்கும் பொருட்டும், வடமாகாண முதலமைச்சரிடம் சேர்க்கும் பொருட்டும், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன் மற்றும் மேரிகமலா குணசீலன் ஆகியோரிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கையளித்தனர்.

இந்தப்போராட்டத்தில் மன்னார், வவுனியா மாவட்டங்களின் பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள், “நாங்கள்” இயக்க உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

image_handle (2)

image_handle (1)

image_handle

arppaddam mullai d8545545

Related Posts