- Friday
- July 31st, 2026
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில், அவரது தலைமையில் வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது.அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் பங்கேற்பதுடன் வடக்கு அமைச்சரவையும் பங்கெடுக்கவுள்ளது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், முதன் முதலாக வடக்கு மாகாணத்துக்கு-யாழ்.மாவட்டத்துக்கு மைத்திரிபால சிறிசேன வரவுள்ளார். அவரின் தலைமையில் இடம்பெறும்...
யாழ் ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்துவதற்காக நேற்று முதல் இணையத்தள வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.யாழ் ரயில் நிலையத்தில் வைபை வசதியை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரயில் திணைக்களத்தின் வணிக அத்தியட்சகர் டி.டப்ளியூ. சிசிர குமார தெரிவித்துள்ளார். இணையத்தள வசதிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன கலந்து...
பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை இரு வருடங்களில் காண முடியுமென தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதால் நிச்சயமாக இது சாத்தியப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அதிகூடிய அதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு...
உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருவது ஒருபோதும் இனவாதமாக முடியாது. உண்மையை முதலில் அறிந்தால் தான் நல்லெண்ணம் பிறக்க வழிவகுக்கலாம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானம் குறித்து, "நல்லாட்சிமிக்க அரசாங்கத்துடன் விளையாட வேண்டாம். இதுவே இனவாதிகளுக்கான எனது இறுதி எச்சரிக்கை" என பிரதமர் ரணில்...
இலங்கையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, தமிழ் கட்சியினர் செல்வது இல்லை. இது கடந்த 33 வருடங்களாக இருந்து வருகிறது. ஆனால் அதனை சுமந்திரனும் சபந்தர் ஐயாவும் உடைத்துவிட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள இதர உறுப்பினர்கள் போகவேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தும் அதனையும் மீறி சுமந்திரனும் சம்பந்தரும் சென்றுள்ளார்கள். இதனை நியாயப்படுத்த முற்பட்டுள்ளார் சுமந்திரன்....
உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை. அது இன்னும் காலதாமதத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே தெரிவித்ததை போன்று மார்ச் மாதம் ஐ.நா அறிக்கை வெளியிடப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்’ என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறும் அதற்கு நீதி வழங்குமாறும் வலியுறுத்தி கவனயீர்ப்புப் பேரணி போராட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று காலை 10 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி பலாலி வீதி...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடுமாறு வலியுறுத்தியும், இறுதிப் போரில் அரச படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது. யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,...
ஐ.நா சபையின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரி பல்கலைக்கழக சமூகத்தினால் மேற்கொள்ளவுள்ள மாபெரும் பேரணிக்கு தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா சபையில் விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட இருந்தநிலையில் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. எனவே விசாரணை அறிக்கையை...
ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து இணைந்து கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. பேரணி தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கும் கலந்துரையாடல் நேற்று யாழ்....
யாழ்.பல்கலைகழக சமூகத்தின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் சிவில் சமூக அமைப்பு, நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் கையெழுத்துப் போராட்டம் ஒன்றையும் நடதத் தீர்மானித்துள்ளது. தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள அரச சார்பற்ற அமைப்புக்களின் இணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பிலேயே மேற்படி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...
சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்றும் புலிகளே அவரைக் கொன்றிருக்கலாம் என மறைமுகமாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரபாகரனின் இளைய மகன் தொடர்பில், இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும்...
காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் “காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா?“ “உலகே உனக்கு கண்ணில்லையா?“ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்தப் போராட்டத்தில் வடமாகாண...
அண்மையில் ஜனாதிபதி அவர்களினால் பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். அவரிடமிருந்து மீளப்பெறப்பட்ட பதவி நிலைகளெல்லாம் மீண்டும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, பிரதம நீதியரசர் அவர்களுக்கும் அவருடைய பதவி நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த அணுகுமுறையை ஏன், எங்களது தமிழ்...
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை அறிக்கையை மார்ச் மாத ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்காமல் செப்டெம்பர் மாத அமர்வு வரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் - ஹுசைன் ஒத்திவைத்துள்ள நிலையில், அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. அடுத்த மாதம்...
சில மணிநேரங்களுக்கு முன்பாக ரயில் மோதி யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (19) 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டிக்காக தனது இல்லத்தின் சோடனைகளை முடித்துக் கொண்டு, தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சமயமே இவ்விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சுன்னாகம் புகையிரத நிலையத்திலிருந்து...
இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான அறிக்கை காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் வெளிவரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அழைப்பாணை உத்தரவினை பிறப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை உத்தரவுகளை பிறப்பிக்க பதிவாளருக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் ஊடாக நாட்டு பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை...
இராணுவத்தினர் தங்களை முகாம்களுக்குள் முடக்கிக்கொள்ளவேண்டும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.வடபகுதியில் இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக் 25 ம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களை எவ்வாறு மக்களிடம் மீள கையளிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக 25 வடபகுதிக்கு செல்கிறேன், தற்போது இராணுவத்திடம்...
ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் இனப்படுகொலை தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சிகளை முழுமையாக முன்வைக்க முன்வர வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் . இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட...
Loading posts...
All posts loaded
No more posts
