19ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி: வர்த்தமானியும் வெளியானது

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்புக்கு திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதுடன் விசேட வர்த்தமானியும் வெளியானது. இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் ஞாயிறன்று அவசரமாகக் கூடியிருந்த விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. இலங்கையில் மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரான டி எம் சுவாமிநாதன் இதனை உறுதிப்படுத்தினார். முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: இலங்கையயில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட...
Ad Widget

25 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணை பார்வையிட்டனர் வளலாய் மக்கள்!

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருந்த வலி கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் கிராமத்தை 25 வருடங்களுக்கு பின்னர் பர்வையிட்டனர் அந்த கிராம மக்கள். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஹரீம் பீரிஸ் தலைமையில நடைபெற்ற கூட்டத்தில எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்தப் பகுதி முதற்கட்டமாக விடப்பட்டுள்ளது....

கோட்டாபய விரைவில் கைதாவார்?

காலி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை விவகாரம் தொடர்பில் தேசிய நிறைவேற்று அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதில் பெரும் மோசடிகள் இடம்பெற்றன எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 'அவன்ற் கார்டே' நிறுவனத்தின் இந்த ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு முடியும்வரை, கோட்டாபய...

வலி.வடக்கு மீள்குடியேற்றம் ; இன்று இறுதி தீர்வு

வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது. இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்ட வலி.வடக்கு பிரதேசத்தில் ஆரம்பக் கட்டமாக மக்களுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி விடுதலை செய்வது தொடர்பில் அண்மையில் ஆராயப்பட்டதுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசே குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. குறித்த குழுவின் நடவடிக்கைகளின்...

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை வரவேண்டாம் – சுரேஸ்

கடந்த இரு மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 10 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புபிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அனேகமானவர்கள் யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள், புதிய அரசாங்கம் அவர்களை நாடு திரும்புமாறு விடுத்த அழைப்பை ஏற்று நாடு திரும்பியவர்கள் அவர்கள் நம்பிக்கையுடன் நாடு திரும்பியபோதிலும், விமான நிலையத்தில் அவர்கள் நடத்தப்பட்டவிதம்,...

மீண்டும் மக்கள் காணிகள் சுவீகரிப்பு

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த காலங்களில் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்குச் சொந்தமான 11 யஹக்ரேயர் காணி சுவீகரிக்கப் பட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளு மாறு, யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். மருதங்கேணி...

இலங்கைக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம்; எச்சரிக்கிறார் ஐ.நா ஆணையாளர்

பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆலோசித்தே உள்ளக விசாரணைப் பொறிமுறை ஆரம்பிக்கப்பட வேண்டும். மாறாக கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட தோல்வியில் முடிந்த விசாரணைப் பொறிமுறையினை அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என ஐ.நா மனித மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹீசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 28ஆவது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. அதில்...

அனந்தி நாளை முதல் தொடர் உண்ணாவிரதம்

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாளை வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 09.00 மணிக்கு இவ்வாறு போராட்டத்தினை அவர் ஆரம்பிக்கவுள்ளார். வட பகுதியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள், இராணுவத்தில் சரணடைந்த காணாமல் போனவர்கள் உட்பட மீள்குடியேற்றம் போன்ற...

காணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில் – வடக்கு முதலமைச்சர்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பலர் இலங்கையின் பல இடங்களில் உள்ள இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக வடக்கு முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். காணாமல் போனவர்களின் உறவுகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்ததுடன் அரச அதிபர் ,...

முல்லைத்தீவு கோட்டாபய முகாம் குறித்து விளக்கமளிக்கக் கோரிக்கை

தெஹிவளையில் 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் அவர்கள் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர். கடற்படையினரால் கடத்தப்பட்ட ஜந்து.மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் கடத்தப்பட்டு காணாமல்போன மாணவர்களின் பெற்றோர்களை மனுதாரர்களாக பெயர் குறிப்பிட்டு சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி...

‘அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது’ கதறியழுத உறவுகள்

பாதுகாப்பு படைகளால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு காணாமற்போனவர்களின் உறவுகள் தமக்கு நீதிகோரி யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை காணாமற்போனோர் பாதுகாவலர் சங்கம் ஏற்பாடு செய்தது. கடந்த 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாத...

தாயைப் பார்க்க இலங்கை வந்த பகீரதி தடுப்புக்காவலில்

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி என்ற தாய் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார். 2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை வந்து கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாத விடுமுறையை கழித்துவிட்டு, பிரான்ஸ் திரும்பும் வழியிலேயே நேற்று முன்தினம் திங்கட்கிழமை...

வடக்கு, கிழக்கு,தெற்கு மக்களை உள்ளங்களால் ஒன்று சேர்க்க நடவடிக்கை எடுப்பேன்- ஜனாதிபதி

இங்குள்ள பிரச்சினைகள் அனைத்தையும் நான் அறிவேன். அதனைத் தீர்க்கும் அவசியம் எனக்கு உள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்...

காணாமற்போனவர்களின் உறவினர்கள் நாளை யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

காணாமற்போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து நாளை புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை யாழ். அரச செயலகம் முன்பாக நடத்தவுள்ளனர். அத்துடன் ஜனாதிபதியிடம் மனு ஒன்றையும் தாம் கையளிக்கவுள்ளனர் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களையும், காணாமற் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரையும் பங்கேற்குமாறும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை வடபகுதியில் இச்சங்கத்தினால்...

அனந்தி – சுரேஸ் – மற்றும் லண்டன் புலம்பெயர் அமைப்பினருக்கு தமிழரசுக்கட்சி மத்தியகுழு கண்டனம்

வவுனியாவில் ஞாயிறன்று(1.3.2015) காலை கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு அந்தக் கட்சியின் மகளிர் அணி துணைச்செயலாளரும் வட மாகாணசபை உறுப்பினருமாகிய அனந்தி சசிதரன் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்குத் துணை...

100 நாள் வேலைத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது அரசு!

தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் சம்பந்தமாக பொது மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக விசேட பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- பொதுமக்கள் பங்கேற்புடன் மிகவும் பயன்மிக்க, வினைத்திறன் மிக்க மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வகையில் இந்த...

வலி.வடக்கில் 1000 ஏக்கர் நிலங்களை மூன்று கிழமைகளில் விடுவிக்க நடவடிக்கை

வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளில் ஆயிரம் ஏக்கரை நிலச்சொந்தக்காரர்களிடமே கையளிக்க 3 கிழமைகளில் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக்...

இரு பிரதேச சபைத்தேர்தலுக்கு இடைக்கால தடை

நாளை சனிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தினால் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடலில் இந்திய மீனவர்கள் அட்டூழியம்

வடக்கு கடற்பரப்பில் புதன்கிழமை (25) இரவு அத்துமீறி நுழைந்துள்ள இந்திய மீனவர்களின் றோலர் படகுகள், இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து பாரிய சேதத்தை விளைவித்துள்ளன என்று கடற்றொழிலாளர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த மீனவர்களில் 150க்கும் மேற்பட்டவர்களின் வலைகளை றோலர்களில் வருகை தந்த இந்திய மீனவர்கள், நாசம் செய்தனர் என்று வடமராட்சி...
Loading posts...

All posts loaded

No more posts