Ad Widget

‘அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது’ கதறியழுத உறவுகள்

பாதுகாப்பு படைகளால் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு காணாமற்போனவர்களின் உறவுகள் தமக்கு நீதிகோரி யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (04) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை காணாமற்போனோர் பாதுகாவலர் சங்கம் ஏற்பாடு செய்தது.

கடந்த 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளால் கைது செய்யப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாத உறவுகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

தாங்கள் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பி வாக்களித்ததாகவும், தாங்கள் இவ்வளவு வருடமும் அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தமது கண்ணீருக்கு அரசாங்கம் பதில் சொல்லவேண்டும், இல்லையேல் தாம் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தமுது உயிரை மாய்த்துக்கொள்வோம் என்றும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்து மகஜர் கையளித்தனர். தாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் இல்லையேல் உங்களுக்கு இடைஞ்சலாக மாவட்டச் செயலக வாயிலில் உண்ணாவிரதம் இருப்போம் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ் பளிஹக்காரவிடமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜர் கையளித்தனர்.

missing-peple-3

missing-peple-2

missing-peple-1

Related Posts