Ad Widget

100 நாள் வேலைத்திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது அரசு!

தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் அதன் முன்னேற்றம் சம்பந்தமாக பொது மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக விசேட பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

100 days

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

பொதுமக்கள் பங்கேற்புடன் மிகவும் பயன்மிக்க, வினைத்திறன் மிக்க மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வகையில் இந்த வேலைத் திட்டத்தினை வெற்றி பெறச் செய்வதே இதன் நோக்கமாகும்.

இந்தவேலைத் திட்டம் தொடர்பான பூரணமான விவரங்கள், தகவல்கள் மற்றும் அதன் தற்போதைய நிலைமை என்பவற்றை www.pmm.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

100 நாள் வேலைத் திட்டம் தொடர்பான உங்களது கருத்துக்கள், விமர்சனங்கள், பிரேரணைகள், குற்றச்சாட்டுக்களை பணிப்பாளர் நாயகம், செயற்றிட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கிக் கட்டடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 எனும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்க முடியும்.

இணையத்தளத்தின் ஊடாக தெரிவிப்பதாயின் 100dayfeedback@pmm.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக தெரிவிக்கலாம். தொலைபேசி ஊடாக தெரிவிப்பதாயின் 011 24 77 915 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முடியும், எனக் கூறப்பட்டுள்ளது.

Related Posts