Ad Widget

இலங்கைக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம்; எச்சரிக்கிறார் ஐ.நா ஆணையாளர்

பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆலோசித்தே உள்ளக விசாரணைப் பொறிமுறை ஆரம்பிக்கப்பட வேண்டும். மாறாக கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட தோல்வியில் முடிந்த விசாரணைப் பொறிமுறையினை அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என ஐ.நா மனித மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹீசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

al-husain

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 28ஆவது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. அதில் வருடாந்த அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளாத பொறி முறைகளை இலங்கை அரசு கையாண்டமையால் அவை தோல்வியில் முடிவடைந்தன.

எனவே இவ்வாறான பொறிமுறையினை எதிர்வரும் காலங்களிலும் அரசு செயற்படுத்த முனையக் கூடாது.

மாறாக பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டு புதிய உள்நாட்டு விசாரணைப் பொறி முறையினை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கை இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதி மற்றும் ஐ.நா விசாரணைக்குழுவினர் வழங்கிய பரிந்துரைகளின் படியும் செப்ரம்பரில் விசாரணை அறிக்கையை வெளியிடுவதாக அறிவித்துள்ளேன்.

எனவே இலங்கைக்கு இறுதியாக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது . அதன்படி நாட்டில் நீதியும், சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts