Ad Widget

25 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணை பார்வையிட்டனர் வளலாய் மக்கள்!

உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருந்த வலி கிழக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் கிராமத்தை 25 வருடங்களுக்கு பின்னர் பர்வையிட்டனர் அந்த கிராம மக்கள்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஹரீம் பீரிஸ் தலைமையில நடைபெற்ற கூட்டத்தில எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்தப் பகுதி முதற்கட்டமாக விடப்பட்டுள்ளது.

பொது மக்கள், மிகவும் ஆர்வத்துடன் தமது வீடுகளுக்குச் செல்கின்றோம் என்ற உணர்வுடன் வந்திருந்தபோதிலும் தமது வீடுகள் இருந்த இடமே தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளதுடன் எல்லைகள் கூடத் தெரியாமல் அழிக்கப்பட்டு திறந்தவெளியாகவே காணப்பட்டது.

பற்றைகள் செடிகொடிகள் மற்றும் மரங்கள் வளர்ந்து அவர்களுடைய வீடுகள் இருந்த இடத்தைக் கூட அடையாளம் காட்ட முடியாத நிலையில் பரிதவித்தமை மிகவும் வேதனையாக இருந்தது.

கோப்பாய் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தனது அலுவலக ஊழியாகள் மூலம் உரிய பதிவுகளை மேற்கொண்டு இராணுவத்தினரின் எந்த வகையான கெடுபிடிகளும் இன்றி பொது மக்கள் தமது காணிகளுக்கு செல்ல அழைத்து செல்லப்பட்டார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கே.சர்வேஸ்வரனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் ஜே/284 கிராம அலுவலர் பிரிவில் உள்ள 236 ஏக்கர் காணியில் மக்கள் மீளக்குடியேற அனுமதித்த நிலையில் இங்கு நிலை கொண்டு இருந்த இராணுவத்தினர் தமது முன்னரங்க காவல் நிலையத்தை தற்போது இருந்த இடத்தில் இருந்து சுமார் ஒன்றை கிலோ மீற்றர் தூரம் வரை பின்நகர்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts