- Tuesday
- May 5th, 2026
ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமானவை எனக் கருதப்படும் 53 வானங்கள் புறக்கோட்டைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இவை நேற்றிவு ஸ்ரீஜெயவர்த்தனபுர களஞ்சியசாலையில் இருந்து மீரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமானதென அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமற்போயுள்ளன ஜனாதிபதி செயலகத்துக்குச்...
கல்வியங்காடு செங்குந்தா சந்தையிலிருந்து பெறப்பட்ட வருமானங்களின் நிலையான வைப்புப் பணத்தை எடுத்து வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டாம் என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் அவைத்தலைவர் வியாழக்கிழமை (22) மாநகர ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'கடந்த 2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில்...
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மூன்று சந்தேகநபர்களை வியாழக்கிழமை (22) மாலையில் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், கோண்டாவில் பகுதியை சேர்ந்த மருத்துவமாதுவுக்கு மதுபோதையில் வீதியில் நின்றிருந்த மூன்று பேர் தகாத வார்த்தைகளால் பேசி, அவருடை விழிப்புலனற்ற கணவரை கடுமையாகத் தாக்கியதாக...
ஆறாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணத்தில் கோலகலமாக ஆரம்பமாகி தொடர்ந்து 3நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. தென்னிலங்கை வர்த்தகர்கள் -யாழ்ப்பாண வர்த்தகர்களிடையே வர்த்தக ரீதியாக தொடர்பை ஏற்படுத்தும் விதமாக இந்தக் கண்காட்சி நடைபெறுகின்றது. இன்று காலை 9மணியளவில் யாழ்.பொதுநூலகத்தில் இடம்பெற்ற குறித்த கண்காட்சியின் ஆரம்பிப்பு நிகழ்வினூடாக விருந்தினர்கள் மேள,தாள வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டு யாழ்.மாநகர சபை மைதானத்தில்...
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சவுதி மன்னர் அப்துல்லா காலமானார். புதிய மன்னராக அவரது சகோதரர் சல்மான் அறிவிக்கப்பட்டிருக்கிறார். புதிய மன்னராகும் சல்மான் தனது வாரிசாகவும் பட்டத்து இளவரசராகவும் அவரது உறவினர் முக்ரினை தேர்ந்தெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எண்ணெய் ஏற்றுமதியில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள சவுதி அரேபியாவின் மன்னராக 2006 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட...
வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக்கூறி அவர்களை, ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் முறையற்ற விதத்தில் பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியமையை கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபையின் மாதாந்த கூட்டத்தொடர் நகர சபை தவிசாளர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் வியாழக்கிழமை (22)...
எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கரவண்டிகளின் கட்டணம் தொடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அகில் இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பஜட் டெக்ஷி சேவைகள் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தமென்பதே எமது நிலைப்பாடாகும். பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது, யுத்தத்திற்குப் பின்னர் சொந்த வாழ்விடம் திரும்பிய மக்களினதும்...
அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தில் கூறியது போன்று, எதிர்வரும் 29 ஆம் திகதி சமர்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு முதல்கட்டமாக 5,000 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். எதிர்வரும் ஜுன் மாதம் மேலும் 5,000 ரூபாய் அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளது. எனினும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம்...
என்னுடைய மாதந்த சம்பளம் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை நான் பெறமாட்டேன். அவற்றை வீடு அபிவிருத்தி நிதியத்தில் வைப்பிலிடுவேன் என்று வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் தன்னுடைய கடமைகளை நேற்று வியாழக்கிழமை (22) பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நல்லாட்சிக்கு முன்மாதிரியாகவே இதனை...
யுத்தத்தால் இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றம் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் குறைவான மக்களையும் இலங்கையில் நலன்புரி முகாம்களிலும் மற்றும் உறவினர் வீடுகளிலும் உள்ள 7840 குடும்பங்களுக்கு உட்பட்ட 26056 பேர் உள்ளார்கள் அவர்களை...
விண்வெளியில் ‘2004 பிஎல் 84’ என்ற பெரிய விண்கல் இருப்பது, கடந்த ஆண்டு, நியூ மெக்சிகோவில் உள்ள ‘ஒயிட் சேன்ட்ஸ் நியர் எர்த் ஆஸ்டீராய்டு ரிசர்ச் சர்வே’யில் தெரியவந்தது. அந்த விண்கல் இப்போது, பூமிக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. வருகிற 26-ந் திகதி, இந்த விண்கல் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும். அப்போது பூமிக்கும்,...
நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதே தனது கணிப்பு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அனலைதீவு பிரேதச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை நேற்று வியாழக்கிழமை காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து...
நாட்டில் கடந்த காலங்களில் நடந்த பாரிய ஊழல், மோசடிகளை கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 11 பேர் அங்கம் வகிப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார். குழுவில் ரணில் விக்ரமசிங்க (தலைவர்),...
தற்போதுள்ள எமது பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களை உடனடியாக மாற்றி அரசியல் சார்பற்ற கல்வியறிவு கொண்ட புத்திஜீவிகளை இந்த அவையிலே நியமிக்க வேண்டும். - இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கடந்த காலங்களில் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்கள் அரசியல் தலையீடுகளினாலும், தனிநபர் செல்வாக்குகளினாலும் தகுதியற்ற உறுப்பினர்களை நியமித்தமையை...
விடுதலைப் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினரான நகுலேஸ்வரன் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு பேரில் நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். கிராம அலுவலர் உட்பட மூவர் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட்ட வெள்ளாங்குளம் கணேசபுரம் கிராமத்தில் உள்ள ஈசன் குடியிருப்பு பகுதியில்...
கிழக்கில் முதலமைச்சர் பதவியைக் கோரும் கூட்டமைப்பின் கருத்து நியாயமானது! – மைத்திரி, ரணில் தெரிவிப்பு
"தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் - அதிக உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் நாம் தெளிவாக எடுத்துரைத்தோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
வேலணை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 20 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை மற்றும் உடற்பயிற்சி கூடம் (ஜிம்) என்பன மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சின்னையா சிவராசா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நகர எழுச்சி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேலணை பொதுச்சந்தை மற்றும் வடக்கின்...
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். தகுதி அடிப்படையில் மிகமூத்த அதிகாரியான குமாரசிங்க சிறிசேன, டெலிகொம் நிறுவனத்தின் தலைமைக்கு பொருத்தமானவர் என்ற காரணத்தினாலேயே இப்பதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை அரச நியமனங்களுக்கு பயன்படுத்தமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - தேர்தல் காலத்தில்...
கிரிக்கெட்டையும் மூட நம்பிக்கைகளையும் பிரித்து பார்க்க முடியாது. சச்சின் அடித்து ஆடும்போது இருக்கும் இடத்தைவிட்டு அசையாமல் இருக்க வேண்டும் என்பது நம்மில் பலபேர் வகுத்துக் கொண்ட எழுதப்பட்டாத நம்பிக்கை. எழுந்தால் எங்கே விக்கெட் போய்விடுமோ என்ற பயம்தான் அதற்கு காரணம். கும்ப்ளே-சச்சின் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கும்ப்ளே...
Loading posts...
All posts loaded
No more posts
