Ad Widget

சவுதி மன்னர் அப்துல்லா மரணம்

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சவுதி மன்னர் அப்துல்லா காலமானார். புதிய மன்னராக அவரது சகோதரர் சல்மான் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

saudi1

புதிய மன்னராகும் சல்மான் தனது வாரிசாகவும் பட்டத்து இளவரசராகவும் அவரது உறவினர் முக்ரினை தேர்ந்தெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எண்ணெய் ஏற்றுமதியில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள சவுதி அரேபியாவின் மன்னராக 2006 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட அப்துல்லா பின் அப்துல் அசிஸ், தொடர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும், இன்று அதிகாலை 1 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாகவும் மன்னர் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா மத்திய கிழக்கு பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்

Related Posts