- Tuesday
- May 5th, 2026
கமல்ஹாஸனின் நடிப்பில் உருவாகியுள்ள உத்தம வில்லன் படம் வரும் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு கமல் ஹாஸன் நடிக்க ஆரம்பித்த படம் உத்தம வில்லன். படத்தை கடந்த செப்டம்பரிலேயே வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் சொன்ன தேதியில் வெளியிடவில்லை. அக்டோபர், டிசம்பர் என வேறு மாதங்களில் வெளியிடப் போவதாகச் சொன்னவர்கள், கடைசியாக பிப்ரவரி...
தமிழ் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று நினைக்கிற எந்த கதாநாயகியும் இப்படி ஒரு வாய்ப்பை மறுக்க மாட்டார்கள். ஆனால், நயன்தாரா தன்னை தேடி வந்த ஜாக்பாட் ஒன்றை திருப்பி அனுப்பியுள்ளார். இயக்குனர் அட்லீ இளைய தளபதியுடன் இணையும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை தான் கமிட் செய்தாராம். ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை...
மென்பொருள் துறையின் ஜாம்பாவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான "விண்டோஸ் 10" ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் விண்டோஸ் 10 மென்பொருளை, அனைத்து விண்டோஸ் மற்றும் விண்டோஸ் மொபைல் பயனாளிகள் இலவசமாக அப்கிரோடு செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம்...
புதிய இராணுவ ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் கே.ஜெ.ஜயவீர தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார். இப்பதவியில் இருந்த ருவான் வனிகசூரிய உடன் அமுலுக்கு வரும் வகையில் இராணுவ தலைமையகத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28 ஆம் திகதி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றது. எனவே தமது பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விரும்புவோர் உடனடியாக தத்தமது விண்ணப்பங்களை பரீட்சை திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்படுகிறன்றனர். இம்முறை மேற்படி பரீட்சைக்கு 2...
நாடாளுமன்ற அமர்வில் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளரினால் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவ் ஊடக அறிக்கையில் ..... ஆட்சிமாற்றம் ஒன்றின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று வாக்களித்துள்ள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நாம் ஆதரவளிப்போம். இதேவேளை...
எதிர்வரும் ஜூலை மாதம் முதல், மின்சார கட்டண அறவீட்டு முறையில் மாற்றம் செய்யப்படும் என மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வியாழக்கிழமை(22) இதனை தெரிவித்தார்.
எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதையடுத்து தனியார் பஸ்கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். பஸ் கட்டணங்கள் 7 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதன்பிரகாரம் ஆரம்பக்கட்டணம் 8ரூபாவாகும்
சுன்னாகம் பகுதியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருந்தாக கூறப்படும் நோர்தன் பவர் நிறுவனத்தை உடனடியாக மூடுமாறு மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான செல்வி சாந்தா அபிமன்னசிங்கம், தெரிவித்தார். அமைச்சருடன் கொழும்பில் மேற்கொண்ட சந்திப்பில் அமைச்சர் இந்த...
எரிபொருள் விலை குறைப்பின் பின்னர், கூடிய விலையில் எரிபொருள் விற்பனை செய்யும் சம்பவங்கள் ஏதும் இடம்பெற்றால், அது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட முறைப்பாட்டு பிரிவுக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் மின்வலும் மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று கேட்டுக்கொண்டுள்ளது. அவசர தொலைபேசி இலக்கம் - 0115 243 243 அல்லது தொலைபேசி இலக்கங்கள் -...
இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்களுக்கும் தனியார் பஸ் சங்க ஊழியர்களுக்கும் இடையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் புதன்கிழமை (21) பிற்பகல் கைகலப்பு ஏற்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வட்டக்கச்சி வழித்தட சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை பேருந்தை, வட்டக்கச்சியில் இடைமறித்த தனியார் பஸ் சங்கத்தை சேர்ந்தவர்கள்,...
"ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயை புலிகள் கொன்றனர் என்பதில் சந்தேகம் இருக்கிறது" இப்படி தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்: "அரசியல்வாதிகளான நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன்,...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும் என்று உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார். உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரமொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க நேற்றுப் புதன்கிழமை கொழும்பிலுள்ள உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலுள்ள கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை கண்டித்து கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கல்லூரி முன்றலில் புதன்கிழமை(21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் பொதுக்கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டிருப்பதாக, தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமாரால் அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 10 நிமிடங்கள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, மாணவர்களும் ஆசிரியர்களும் கலைந்து...
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் கடந்த 2014ஆம் ஆண்டு 303 வீடுகள் யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் பரந்த அடிப்படையிலான கடன்திட்டம், வருமானம் குறைந்தவர்களுக்கான வீடமைப்பு திட்டம்,...
குடிநீரில் எண்ணெய் கலப்பு பிரச்சினைக்கான செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்களை இனியும் முன்னெடுப்பது பயனற்றதாவே அமையும் என்று வடமாகாண விவசாய, சுற்றுச் சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தெரிவித்தார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள், கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு...
தமிழில் மட்டும் கலக்காமல் பாலிவுட்டிலும் தன் திறமையை காட்டி வரும் தனுஷ் விரைவில் ஒரு புதிய அவதாரம் எடுக்க உள்ளார். தமிழில் தனது தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டு வெற்றி படங்களில் கொடுத்தா தனுஷ் பாலிவுட்டிலும் வெற்றி படலத்தை தன் தயாரிப்பு நிறுவனம் முலம் பல திறமையான கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து படங்களை தயாரிக்க போகிறாராம். மிக விரைவில்...
சனாதிபதித்தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு மைத்திரி பாலவை ஆதரிப்பதாக முடிவை அறிவித்ததன் பின்னர் அதற்கு எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவரான சிவகரனினால் கட்சி உறுப்பினர் மறவன்புலோ சந்திதானந்தனுடன் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் கட்சியில்...
உலகக்கோப்பை போட்டிகள் தற்போது நடத்தப்படும் முறை பிடித்தமானதாக இல்லை. சுலபமாக கணித்து விடக்கூடியதாக இருக்கிறது என்று ராகுல் ராவிட் விமர்சித்துள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என் - கிரிக் இன்ஃபோ இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோ விவாதத்தில் ராவிட் கூறியதாவது: "எனக்கு இப்போது நடத்தப்படும் முறை பிடிக்கவில்லை. காலிறுதிக்கு முன்னேறும் டாப் 8 அணிகள் எதுவென்று முன் கூட்டியே...
மத்தல மற்றும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையங்களிலுள்ள அனைத்து வரியற்ற வர்த்தக நிலையங்களினதும் அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யுமாறு விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பைஸார் முஸ்தபா உத்தரவிட்டுள்ளார். அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். 'முன்னைய காலங்களில் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தன. தற்போது...
Loading posts...
All posts loaded
No more posts
