Ad Widget

அரசியல்வாதிகள், கொலையின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் பிடியில்!

“ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயை புலிகள் கொன்றனர் என்பதில் சந்தேகம் இருக்கிறது” இப்படி தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன.

rajitha sena

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

“அரசியல்வாதிகளான நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன், ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் படுகொலைகளுக்கு பின்புலமாக யார் இருந்தனர் எனத் தெரிய வந்துள்ளது.

கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த விரைவான நடவடிக்கைகளை எடுப்போம்.” ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயை புலிகள் கொன்றனர் என்பதில் சந்தேகம் இருக்கிறது.

ஏனெனில் ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் பேசும்போது ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, ரவிராஜ் போன்றவர்கள் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் மக்களுடனான உறவு எவ்வாறு இருந்திருக்கும் எனக் கேட்டேன். இதற்கு மஹிந்த இராணுவத்தினருக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியவில்லை எனக் கூறினார்.

இந்நிலையில் விரைவில் அரசியல்வாதிகளான நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன், ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் படுகொலைகளுக்குப் பின்னால் இருந்து செயற்பட்டவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவர். – என்றார் ராஜித.

Related Posts