Ad Widget

செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் போராட்டங்கள் அவசியமில்லை – ஐங்கரநேசன்

குடிநீரில் எண்ணெய் கலப்பு பிரச்சினைக்கான செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்களை இனியும் முன்னெடுப்பது பயனற்றதாவே அமையும் என்று வடமாகாண விவசாய, சுற்றுச் சூழல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தெரிவித்தார்.

Ainkaranesan

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கிணற்றில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள், கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குடிநீர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு யூனியன் கல்லூரிக்கு சென்ற நிபுணர் குழுவின் செயற்பாடுகள், தமக்கு அதிருப்தி ஏற்படுத்துவதாக பாடசாலை சமூகம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக அமைச்சரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

நீர் மாதிரியை எடுப்பதற்காகவே வடமாகாண சபையின் நிபுணர் குழு தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு சென்றது.
எண்ணெய் கசிவு பிரச்சனையானது தற்போது உலகளாவிய ரீதியில் பேசப்படுகின்ற ஒரு பிரச்சியாக மாறியுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் தற்போது சம்பந்தப்பட்ட தரப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அது தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாண சபையால் அமைக்கப்பட்ட நிபுணர்குழு தமது செயற்றிட்டங்களை ஆரம்பித்துள்ளனர் எனக்கூறினார்.

கல்லூரிக்கு, புதன்கிழமை (21) சென்ற நிபுணர் குழு எந்தவித உபகரணங்களையோ அல்லது பரீட்சித்து பார்க்கும் திரவியங்களையோ எடுத்து வரவில்லையென்றும் கிணற்றிலிருந்த நீரை எடுத்த குழுவினர் கையில் வைத்து தேய்த்து பார்த்த எண்ணெய் கலப்பு இல்லை என ஒருவரும், மற்றவர் ருசித்து பார்த்து சிறிதளவு இருக்கு என்று கூறியதும் தமக்கு அதிருப்பதியாகவுள்ளதாக பாடசாலை சமூகத்தினர் குறைகூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts