Ad Widget

தமிழரசுக்கட்சி பாரபட்சம்! அனந்தியை மட்டும் கட்சியில் இருந்து நீக்கியது

சனாதிபதித்தேர்தலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு மைத்திரி பாலவை ஆதரிப்பதாக முடிவை அறிவித்ததன் பின்னர் அதற்கு எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவரான சிவகரனினால் கட்சி உறுப்பினர் மறவன்புலோ சந்திதானந்தனுடன் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்தமைக்காக

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த இடைநிறுத்தம் சிவகரனுக்கும் அனுப்பப்பட்டதாக முன்னர் செய்திகள் வந்திருந்த போதிலும் அவ்வாறு நிகழவில்லை என்றும் அனந்தி மட்டுமே இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழரசுக்கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அவர்களால் இந்த இடைநிறுத்த கடிதம் அனந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கட்சி யாப்பினை காட்டி தமிழரசுக்கட்சி பாரபட்சமாக அனந்தியை மட்டும் கட்சியில் இருந்து நீக்கியது தவறு என்று தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.இது அனந்தியை கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதற்கான முயற்சி என்றும் கூறப்படுகின்றது. அனந்தி தமிழரசுக்கட்சி மத்திய குழுக்கூட்டத்ததையே கூட்டியிருக்கவில்லை என்று வாதாடுகின்றார்

அனந்தி அவர்களின் எதிர்ப்பால் சிவகரனையும் கட்சியில் இருந்த இடைநிறுத்தவேண்டிய நிலை தமிழரசுக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அதனை சமாளிக்க அனந்தியை கட்சியில் இருந்து நீக்குவதை நிறுத்தவேண்டும் என சிவகரன் கோரியிருப்பதாக மற்றோரு செய்தி  தெரிவிக்கின்றது.

பத்திரிகையாளர் மாநாட்டின் முழுமையான வடிவம்

Related Posts