உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது

நொர்தன் பவர் நிறுவனத்தை மூடுதல் தொடர்பில் நீதிமன்றத்தில் உத்தரவு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்காலிகமான கைவிடப்படுவதாக பருத்தித்துறை சுகாதார வைத்தியதிகாரி பணிமனை வைத்தியர் ஜி.செந்தூரன் தெரிவித்தார். சுன்னாகம் சிவன் கோவில் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர்...

வடக்கு உற்பத்திகளுக்கு வெளிநாட்டில் சந்தைவாய்ப்பு

வடக்கு மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் கேள்வியினை அதிகரிக்கும் நோக்குடன் இங்குள்ள உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும் என வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஸ் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் மன்றத்தின் வடமாகாண காரியாலயத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உற்பத்திப்பொருட்களுக்கான சர்வதேச சந்தைவாய்ப்பு என்ற தொனிப்பொருளில் ஏற்றுமதியாளர்களுக்கும் வடக்கு மாகாண உற்பத்தியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்...
Ad Widget

தன்னை கடத்த முற்பட்டதாக, பெண்ணொருவர் முறைப்பாடு

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் தன்னைக் கடத்திச் செல்ல முற்பட்டதாக நெல்லியடியைச் சேர்ந்த பெண்ணொருவர்(வயது 40) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (22) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நெல்லிடிக்கு செல்வதற்காக, ஆவரங்கால் சந்தியில் பஸ்ஸூக்காக காத்திருந்தபோது, குறித்த பெண்ணை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் நெல்லியடியில் இறக்கிவிடுவதாகக்கூறி ஏற்றியுள்ளார். நெல்லியடிப்...

மீண்டும் இராணுவக் குடியிருப்பு?

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தின் முகப்பு பகுதியில் மீண்டும் இராணுவக் குடியிருப்பு என அடையாளப்படுத்தும் பெயர் பலகையால் வலி,வடக்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த பெயர் பலகை முன்னரும் ஒருதடவை அமைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பிலான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து சிறிது காலம் அகற்றப்பட்டிருந்த பெயர்ப் பலகை தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் வாயிலில் வளைவு...

அரசியல் கைதிகளை சந்தித்தார் விஜயகலா! ரங்காவும் சென்றார்

மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று தனது கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவுக்கு சென்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு நலன் விசாரித்தார். இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஸ்ரீரங்கா, முன்னாள் சிறைச்சாலை புனர்வாழ்வு...

இராணுவ சதித் திட்டத்துக்கு மஹிந்த முயன்றார் என்பதை நிராகரித்து விட முடியாது!

"ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க இராணுவம் மூலம்ஆட்சியைத் தக்க வைக்க மஹிந்த ராஜபக்‌ஷ சதித் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டை என்னால் முழுமையாக நிராகரிக்க முடியாது. ஏனெனில், கொழும்பில் முக்கிய பகுதிகளில் இராணுவ குவிப்பும் ஒரு சில பகுதிகளை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர் எனவும் நான் அறிந்தேன். இது தொடர்பாக பொதுமக்கள் பலர் எனக்குத்...

மத்திய வங்கி ஆளுநராக அர்ஜுன மஹேந்திரன் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மஹேந்திரன், நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார். நேற்று மாலை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வ கடிதத்தினை அன்ஜுன மஹேந்திரனிடம் ஜனாதிபதி கையளித்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் 6 நாட்களில் குறைக்கப்படும்

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்னும் 6 நாட்களில் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அப்பிள்களை வாங்காதீர்கள்!! – சுகாதார அமைச்சு அறிவுறுத்து

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கரமெல் அப்பிள் பழங்களை எவரும் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் அவற்றை எந்த வியாபாரிகளும் விற்பனை செய்யவும் கூடாது என்றும் அறிவித்துள்ள சுகாதார அமைச்சு இறக்குமதியாளர் அவற்றை மீள எடுத்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஒருவகைக் கிருமி தொடர்பான நோய் கட்டுக்கடங்காமல் பரவியுள்ளதனால் இலங்கையில் அது பரவுவதைத் தடுக்க இந்த...

வடக்கு மாகாண அபிவிருத்திப்பாதைக்கு அனைவரும் பங்காளியாகுங்கள் – சீ.வி.கே

கடந்த 30 வருடகாலமாக அழிவுகளையும் பின்னடைவுகளையும் சந்தித்த வடக்கு மாகாணத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு அனைத்து துறை சார்ந்தவர்களும் பங்காளிகளாக மாற வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆறாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது....

சுன்னாகம் கழிவு எண்ணெய்: குற்றச்சாட்டை மறுக்கிறது மின்சார நிறுவனம்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் குடிநீர் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துவருகின்றமைக்கும் அப்பகுதியில் அமைந்துள்ள நொதேர்ன் பவர் கம்பனியின் செயற்பாட்டுக்கும் இடையில் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக யாழ். மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட நிபுணர் குழுவொன்றை அரசாங்கம் நியமித்திருப்பதை நொதேர்ன் பவர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

தன் தந்தையால் மனசங்கடத்திற்கு ஆளான விஜய்?

விஜய் மிகவும் அமைதியானவர், இவருடன் நடிக்கும் அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை இது தான். ஆனால், இவர் சமீபத்தில் தன் தந்தையால் மிகவும் மன வேதனை அடைந்துள்ளாராம். ஏனெனில் நீண்ட இடைவேளைக்கு பிறகு எஸ்.ஏ.சி இயக்கி நடிக்கும் படம் டூரிங் டாக்கீஸ். இப்படம் ஜனவரி 30 தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர்களில் விஜய்யின் தந்தை...

தனுஷையே ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் இன்று இந்த நிலைமையில் இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அதற்கு தனுஷும் ஒரு காரணம். ஆனால், தற்போது தனுஷையே இவர் முந்தும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் காக்கி சட்டை, இப்படத்தையும் தனுஷ் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வரை 18 லட்சத்தை எட்டியுள்ளது. ஆனால், தனுஷின்...

புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் 32 மில்லியன் ரூபா செலவில் வடக்கு விவசாய அமைச்சால் நிர்மாணம்

கிளிநொச்சி மாவட்ட மாயவனூரில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் வடக்கு மாகாண முதல்வர் க.வி. விக்னேஸ்வரனால் நேற்று வெள்ளிக்கிழமை (23.01.2015) கையளிக்கப்பட்டுள்ளது. மாயவனூர் பகுதி மக்கள் குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் தாம் நீரின்றி அவலப்படுவதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு முறைப்பாடு செய்திருந்தனர். இதையடுத்து, விவசாய அமைச்சின் 2014ஆம் ஆண்டுக்குரிய மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில்...

சு.க.வின் தலைவர் மஹிந்தவே

ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தற்போது காணப்படுகிறார் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 10 தினங்களுக்கு முன்னர் அக்கட்சி தனக்கு அனுப்பிய கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஷவே கட்சியின் தலைவர் என்றும் அநுர பிரியதர்ஷன யாப்பாவே கட்சியின் செயலாளர் என்றும்...

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் வித்தியிடம் விசாரணை?

கடந்த காலங்களில், ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளை வெள்ளை வான்களில் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவங்கள் தொடர்பில், வெள்ளை வானில் கடத்தப்பட்டு நீதிமன்றினூடாக விடுதலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனிடமிருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, நம்பகரமாக வட்டாரங்களிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, “தலைநகரிலிருந்து முக்கிய அமைச்சரொருவர் இவ்விடயம்...

உரிய தீர்வு கிட்டும் வரை போராட்டம் தொடரும்!

எமக்கான சரியான தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என, சுன்னாகம் சிவன் கோவில் முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் நிலத்தடி நீருடன் சேர்வதால், வலி. வடக்கு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் உள்ள 800க்கும் அதிகமான கிணறுகளில் கழிவு எண்ணெய்...

நியூஸிலாந்து அணி 108 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி, முன்னதாக இரண்டு டெஸ்ட் மற்றும் ஏழு ஒரு நாள் போட்டிகளில் நியூஸிலாந்தை எதிர்கொள்கின்றது. இதில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள நியூஸிலாந்து, இந்த...

யாழில் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய கட்டிட திறப்பு விழா!

யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய கட்டிடம் இன்று (23) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. யாழ் பழைய பூங்கா வீதியில் அமைக்கப்பட்டுள் இப் பயிற்சி நிலையத்தின் நிர்மானப்பணிகளுக்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 68 மில்லியன் ரூபா...

மகளிர் விவகார பிரதியமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார் விஜயகலா

மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை செத்சிரிபாயவின் புதிய கட்டிடத்தில் உள்ள மகளிர் விகார அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் போது உரையாற்றிய பிரதியமைச்சர், எமது அமைச்சின் ஊடாக வட கிழக்கு உற்பட ஏனைய பிரதேசங்களிலும் துண்பப்பட்ட தமிழ் பேசும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சேவையாற்றவுள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது அபிவிருத்தியில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணம்,...
Loading posts...

All posts loaded

No more posts