Ad Widget

வடக்கு மாகாண சபைக்கு முகாமைத்துவம் தெரியாது!- சுசில்

வடக்கு மாகாணசபைக்கு மற்றைய மாகாணங்களைப் போன்றே நிதி ஒருக்கப்பட்டாலும் அவர்கள் அந்த நிதியை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

susil-peremajeyantha

இதுகுறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளவை வருமாறு:-

வடக்கு மாகாணசபைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்த போதிலும், ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து இரண்டு விடயங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று அவர்கள் அரச நிதியை விரும்பவில்லை. அல்லது கிடைக்கும் நிதியை மற்றைய மாகாணங்களைப் போன்று பயன்படுத்தத் தெரியவில்லை.

வடக்கு மக்களை புறக்கணித்து, புலம்பெயர் அமைப்புக்களின் நிகழ்ச்சிநிரலுக்கு உட்பட்டு அவர்கள் இயங்குவதால்தான் இத்தகைய பிரச்சினைகள் தேன்றுகின்றன. ஆனால் வடக்கு மக்கள் தெளிவாக உள்ளனர்.

ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட சமயம் இதனை அவதானிக்க முடிந்தது. அவர்கள் வடக்கு மாகாண சபையால் பயனில்லை என்பதை உணர்ந்துள்ளனர். வடக்கு மாகாண சபையினர் யாழ்தேவி வருகையை புறக்கணித்தனர். ஆனால் பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர் என்பதை அவதானிக்க முடிந்தது. எனவே புலம்பெயர் புலிகளின் கருத்துக்களை அவர்கள் புறக்கணித்துள்ளனர். – என்றார்.

Related Posts