Ad Widget

அஹிம்சைப் போராட்டத்தில் முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும்!- மாவை

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கில் உரிமைகளைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்கு ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் அஹிம்சைப் போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை. இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோனதிராஜா.

mavai mp

அதேநேரம் வடக்கு மாகாண சபைக்கு அரசு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களையும் செந்த இடங்களில் மீள்குடியேற்ற உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வலிபர் முன்னணிகளின் 44ஆவது வருடாந்த மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹெக்டர் கொப்பேக்கடுவ கமநல ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இங்கு கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

வடக்கில் 80 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஜனநாயக ரீதியான ஆட்சியொன்று இருக்கின்றது. ஆனால் அதனைத் தாண்டி இரணுவன ஆட்சி, ஆளுநர் ஆட்சி என்பன தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வடக்கிலும் கிழக்கிலும் இன்று இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசியலும் அரசியல் மயப்படுத்தப்பட்ட இராணுவமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எமது இன, மத, சமூக அடையாங்களை நிலைநிறுத்தி எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நாம் போராடாது இருக்கவும் முடியாது. 1949ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் முதலாவது மாநாட்டில் தந்தை செல்வா முஸ்லிம்களுடைய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தினார்.

ஒன்றுபட்டுச் செயற்பட வலியுறுத்தினார். இன்று நாம் எமது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அறவழிப்போராட்டத்தை அறிவித்திருக்கின்றோம். வன்முறை வேண்டாம். அதனால் நீங்களும் நாங்களும் நிறைவே அனுபவித்து விட்டோம். 1962ஆம் ஆண்டு தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரக பேராட்டம் நடத்தப்பட்ட போது ஆயிரமாயிரும் முஸ்லிம் பெண்கள் கூட அதில் பங்கேற்றனர். அதை நான் என் கண்ணால் பார்த்திருக்கின்றேன். மீண்டும் அந்தக் காலம் வருகின்றது. எமது இலக்கை அடைவாற்காக ஜனநாக ரீதியில் நாம் முன்னெடுக்கும் போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் பங்கேற்க வேண்டும்.- என்றார்

Related Posts