Ad Widget

பூமிக்கு நெருக்கமாக வரும் எரிகல் – ஆபத்தா?

விண்வெளியில் ‘2004 பிஎல் 84’ என்ற பெரிய விண்கல் இருப்பது, கடந்த ஆண்டு, நியூ மெக்சிகோவில் உள்ள ‘ஒயிட் சேன்ட்ஸ் நியர் எர்த் ஆஸ்டீராய்டு ரிசர்ச் சர்வே’யில் தெரியவந்தது. அந்த விண்கல் இப்போது, பூமிக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது.

Meteorite-eri-stone

வருகிற 26-ந் திகதி, இந்த விண்கல் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும். அப்போது பூமிக்கும், அந்த விண்கல்லுக்கும் இடையேயான இடைவெளி 12 லட்சம் கி.மீ. ஆக இருக்கும். இன்னும் 200 ஆண்டுகளுக்கு, ‘2004 பிஎல் 84’ விண்கல், பூமிக்கு இவ்வளவு அருகாமையில் வராது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த எரிகல் பூமிக்கு நெருக்கமாக வருகிறபோது, வட துருவத்தில் வானியல் ஆராய்ச்சியாளர்கள் சிறிய டெலஸ்கோப் மூலமோ, பைனாகுலர்கள் மூலமோ பார்க்க முடியும் எனவும் அவர்கள் கூறி உள்ளனர்.

Related Posts