Ad Widget

நாட்டை பற்றி சிந்தித்து செயற்படும் நபர்களே நாட்டுக்கு அவசியம்

தன்னைவிட நாட்டை பற்றி சிந்தித்து செயற்படும் நபர்களே தற்போதைய தருணத்தில் நாட்டுக்கு அவசியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

யாழ்: சொகுசு பஸ்சில் இருந்து கேரள கஞ்சா மீட்பு

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு தனியார் பஸ் ஒன்றினுள் இரண்டு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)
Ad Widget

விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள் என்றால் குற்றச் செயல்கள் இடம்பெறாது; கைதான இளைஞன் வாக்குமூலம்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக விடுதலைப்புலிகள் மீண்டும் வருவார்கள் என்ற துண்டுப் பிரசுரத்தை ஒட்டியதாக யாழ். புத்தூர், மீசாலை சந்தி பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞன் கூறியதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார். மாவீரர் தினத்தை நினைவுகூறும் வகையில் விடுதலைப்புலிகளை ஆதரித்த துண்டுபிரசுரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் வீரசிங்கம் சுலக்ஸன்...

மூன்று மீனவர்களை காணவில்லை

பருத்தித்துறை கடலுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை (28) அதிகாலை மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை காணவில்லையென மீனவரின் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர். (more…)

இந்திய மீனவர்கள் மூவர் காரைநகரில் மீட்பு

படகு பழுதடைந்த நிலையில் திசைமாறி வந்த 3 இந்திய மீனவர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். (more…)

‘மகிந்தவையும் குடும்பத்தையும் பாதுகாப்பேன்’ – மைத்திரி

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருதரப்பிலும் ஏட்டிக்குப் போட்டியான ஊடகவியலாளர் சந்திப்புகளும் பிரசார நிகழ்வுகளும் தொடங்கியுள்ளன. (more…)

நைஜீரியாவில் பள்ளிவாசல் மீது தாக்குதல், 200 பேர் பலி

நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரான கானோவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்தியுள்ளனர். [caption id="attachment_36351" align="aligncenter" width="534"] தாக்குதல் இடம்பெற்ற கானோ பள்ளிவாசல்[/caption] அங்குள்ள மத்தியப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். பின்னர் மூன்று குண்டு வெடிப்புகளும் இடம்பெற்றன என்று சம்பவத்தை...

சிம்பு படத்தில் பாடுகிறார் தனுஷ்!

நண்பர்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஊரே கண் வைப்பது போல் இருக்கிறார்கள் சிம்பு, தனுஷ். (more…)

அட்லி இயக்கத்தில் விஜய் – சுவாரஸிய தகவல்கள்

ராஜாராணி படத்தை இயக்கிய அட்லி அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். சிம்புதேவன் இயக்கும் படம் முடிந்ததும் அட்லி படம் தொடங்குகிறது. (more…)

விசா மோசடி கும்பலுக்கு சமூகவலைத்தள எதிர்ப்பும் வேடிக்கையான எதிரொலியும்!

மோசடி நிறுவனத்துக்கு எதிராக முகப்புத்தகத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரால் பரவிய செய்தி இதுதான் (அவருடைய பேச்சு மொழி திருத்தப்பட்டுள்ளது) திசைகாட்டுகின்றோம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் விசா பெற்றுத்தருகிறோம் என்று ஒரு நிறுவனம் புறப்பட்டுள்ளது அது தொடர்பான எச்சரிக்கைதான் அது... விண்ணப்பம் மட்டும் நிரப்புவதற்கு ஒருவரிடம் 70,000 ரூபா வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரோ திசைகாட்டும் நிறுவனமே  தனக்கு விசா வாங்கி கொடுத்ததாகவும்...

சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய்,வடக்கு முதல்வர் தலைமையில் கலந்துரையாடல்

சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ள விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (28.11.2014) வலிதெற்குப் பிரதேசசபை மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், பா.கஜதீபன்,வலிதெற்குப் பிரதேசசபைத் தவிசாளர் தி.பிரகாஷ், மத்திய சுற்றாடல் அதிகாரசபைப் பிரதிப் பணிப்பாளர் விஜிதா சத்தியகுமார்,...

ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாண பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளரை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அதன் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம்...

இலங்கை மீனவர்களை விடுவியுங்கள்: கூட்டமைப்பு கோரிக்கை

மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

த.தே.கூ.உடன் இன்னும் பேசவில்லை: மைத்திரி

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இதுவரையிலும் எவ்விதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்று எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். (more…)

பெண்ணின் கூந்தலை கத்தரித்தவர் கைது

தொண்டைமானாறு, ஊறணி பகுதியிலுள்ள பெண்ணின் கூந்தலை கத்தரித்தவர் என்ற சந்தேகத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை வெள்ளிக்கிழமை (28) கைது செய்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி பெண்ணின் வீட்டுக்குள் கடந்த செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி இரவு நுழைந்த சிலர், வீட்டிலிருந்த பெண்ணை பலவந்தமாக மடக்கி பிடித்து கூந்தலை கத்தரித்தனர். பெண்ணின்...

வடக்கு மக்களுக்கு சம உரிமை மைத்திரியின் வெற்றி உறுதி!

"ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதியாகிவிட்டது. நாட்டுக்கு விடிவு காலம் நெருங்கிவிட்டது. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் அணிதிரளவேண்டும்" என்று மஹிந்த அரசிலிருந்து எதிரணியில் இணைந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். "தெற்கில் பேசப்படும் அளவுக்கு வடக்கில் சுதந்திரம் இல்லை. வடக்கு மக்களின் நிலைமை மிகவும் அபாயகரமானதாக உள்ளது. எனவே, அவர்களுக்கும், முழு...

புத்தளத்தைச் சேர்ந்த மூவர் வெடி மருந்துகளுடன் யாழ்ப்பாணத்தில் கைது!

புத்தளம் பகுதியைச் சேர்ந்த மூவரை, அதி சக்திவாய்ந்த வெடி மருந்துகளுடன் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் வைத்துத் தாம் கைதுசெய்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை கச்சேரிப் பகுதியில்வைத்து இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று தெரிவித்தார். ஓட்டோ...

ஜெகனுக்கு எதிரான விந்தனின் முறைப்பாடு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம்!

தனது பெயர், முகவரி, புகைப்படம் என்பவற்றைப் பயன்படுத்தி ஈ.பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த கே.வி.குகேந்திரன், அவதூறான செய்தியை ஊடகங்குளுக்கு அனுப்பி, அவற்றை பிரசுரிக்குமாறு கோரியமை குறித்து தன்னால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்காகக் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கரகரத்தினம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர்...

கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இல்லை!

யாழ்ப்பாணத்தில் தொடரும் கடும் மழை, மற்றும் கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் அனைத்தும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

மாகாணசபை உறுப்பினர் சுகிர்தனை நேற்றுச் சூழ்ந்துகொண்ட படையினர்!

கடும் மழைகாரணமாக வடமராட்சி,கரவெட்டி பிரதேச செயலகபிரிவில் மக்கள் இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts