Ad Widget

20 வீதம் விலை குறைத்தே உணவுவகைகளை விற்கவேண்டும் – யாழ்.வணிகர் கழகம் கோரிக்கை

யாழ்.மாவட்ட உணவகங்களில் கடந்த காலத்தில் விற்பனை செய்ததை விட 20 வீதம் விலை குறைத்து உணவுவகைளை விற்பனை செய்ய அனைத்து உணவகங்களினதும் உரிமையாளர்கள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் – இவ்வாறு யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வணிகர் கழக அலுவலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் உணவுப் பொருள்கள தயாரிப்பவர்கள் நுகர்வோர் உட்பட வணிகர் கழகத்தின் உறுப்பினர்களுக்கும் இடையேயான கலந்துரையாடல வணிகர் கழகத் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தலைமையில நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாணத்தில் குறிப்பாக நகரப் பகுதியில் இயங்கும் பிரபல்யமான உணவகங்களின் உரிமையாளர்கள், பெரும்பான்மையான உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலைகள் 20 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தததுடன் தாம் முன்னர் விற்ற விலை தற்போது விற்கும் விலை என்பவற்றின் பட்டியலையும் கையளித்தனர்.

ஆனாலும் இன்னும் கிராம மட்டத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் உள்ள தேனீர் கடைகள் என்பவற்றில் எந்தவொரு உணவுப் பொருள்களுக்கும் விலை குறைப்பு செய்யப்பட வில்லையென நுகர்வோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தினால் முக்கியமான உணவுப்பொருட்களுக்கு விலைக்குறைப்புச் செய்யப்பட்ட நிலையில் கட்டாயமாக உணவகங்கள தமது முன்னைய விலையில் இருந்து 20 வீத்தை உணவு வகைகளுக்குக் குறைக்க வேண்டும் எனவும் அத்துடன் உணவுப் பொருள்களின் விலைப் பட்டியலை பார்வைக்கு வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts