. Editor – Page 1474 – Jaffna Journal

மீன்பிடிக்கச் சென்றவர் சுழியில் சிக்கி காணாமல் போயுள்ளார்: வடமராட்சியில் சம்பவம்

வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கட்டு மரத்தில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சுழியில் அகப்பட்டுக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளளது. இதில் ஆழியவளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் துரைசிங்கம் Read more »

யாழ். ஓஸ்மானியா கல்லூரி அதிபர் இடமாற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

யாழ். ஓஸ்மானியா கல்லூரி அதிபரை இடமாற்ற வேண்டாம் என கோரி நாவாந்துறை பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாகாண கல்வி அமைச்சினால் இடமாற்றம் தொடர்பிலான கடிதம் ஓஸ்மானியா கல்லூரி அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், Read more »

வடமாகாண ஆளுநரின் செயலாளர் பதவி நீக்கம்?

வடமாகாண ஆளுநர் சந்திரசிறியின் பிரத்தியே செயலாளர் சுமித் ஜெயக்கொடி உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் தம்பியும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன் மீது Read more »

யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரியாக இதுவரையில் எவரும் நியமிக்கப்படவில்லை

யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரியாக கடமையாற்றிவந்த திருமதி ஏ.எவ்.ஜே.ரூபசிங்கம்  அவர்கள் கடந்த நவம்பர் 26ஆம் திகதி ஓய்வுபெற்றதிலிருந்து இதுவரையில் புதிய யாழ். மாவட்ட விளையாட்டு அதிகாரி எவரும் நியமிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. Read more »

தனியார் மாணவர்களும் தலைமைத்துவ பயிற்சியை கோருகின்றனர்

தலைமைத்துவ பயிற்சியில் பங்குபெறுவதற்கு தம்மையும் அனுமதிக்குமாறு தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களும் கோருவதாகவும் இதற்காக அவர்கள், பிரத்தியேக கட்டணத்தை செலுத்தவதற்கு தயாராக உள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். Read more »

யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி 15 ஆம் திகதி திறப்பு

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி எதிர்வரும் 15 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவனாந்தராஜா தெரிவித்தார். Read more »

யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பெண்கள் பிரிவிற்கான காரியாலயம் திறந்து வைப்பு

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணி வகுப்பு நிகழ்வு இன்று சனிக்கிழநைடைபெற்றது.கோப்பாய் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் ஏற்பாட்டில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா கலந்துகொண்டார்.  Read more »

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது; 3 வாள்கள் மீட்பு

காது, மூக்கு, தொண்டை வைத்திய நிபுணர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அந்தேக சபரின் வீட்டில் இருந்து 3 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா தெரிவித்தார்.  Read more »

ஐம்பாதாயிரத்திற்கும் அதிகமாக மாத வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு: நிதி அமைச்சு

மாதாந்தம் 50000 ரூபாவிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோரிடம் வரி அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.மாதாந்தம் 50000 முதல் 100000 ரூபா வரையில் வருமானம் ஈட்டும் நபர்களிடம் 2 வீத வரியை அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார். Read more »

இந்திய பயணிகளின் வியாபார செயற்பாட்டால் யாழ்.வியாபாரிகள் பாதிப்பு

சுற்றுலா விசாவில் இலங்கை வரும் இந்திய பயணிகள் யாழப்பாணத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபடுவதால் யாழ்.வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார் Read more »

மாதாந்த கட்டணம் செலுத்தாவிடின் உடனடியாகவே மின்சாரம் துண்டிப்பு

மின்பாவனையாளர்களுக்கான மின் கட்டண நடவடிக்கைகள் இந்த வருடம் தொடக்கம் மேலும் இறுக்கமடைகிறது. சுன்னாகம் மின் பொறியியலாளர் ஞானகணேசன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: Read more »

வேலணையில் மின்சாரம் இல்லாத பிரதேசங்களில் சூரிய மின்கலம் பொருத்தப்படும்

வேலணை பிரதேசத்தில் மின்சாரம் இல்லாத இடங்களில் (சோலர்) சூரிய மின்கலம் பொருத்துவதற்காகவும் குடிநீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்காக கிணறுகள் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுவருவதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சி.சிவராசா தெரிவித்தார்.   Read more »

உருக்குலைந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம்

சண்டிலிப்பாயைச் சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காரைநகரில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து நேற்று முன்தினம் இந்தப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.கடந்த டிசெம்பர் மாதம் 6ம் திகதி காணாமல்போன மனநலம் பாதிக்கப்பட்ட Read more »

வெளி மாவட்டங்களுக்கான தனியார் பஸ் தரிப்பிடம் விரைவில் புனரமைப்பு

வெளிமாவட்டங்களுக்கான தனியார பஸ் தரிப்பிடம் விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட தனியார் பஸ் கம்பனிகளின் தலைவர் கெங்காதரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, Read more »

இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தப்படும்: இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை

இந்திய இழுவைப் படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் தீர்வைப் பெற்றுதர வேண்டும். தவறும் பட்சத்தில் இந்திய மீனவர்களுக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more »

வைத்தியர்கள் கோரிக்கை விடுத்தால் பொலிஸ் பாதுகாப்பு வழங்க தயார்: டி.ஜ.ஜி

யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் மீதான தாக்குதல்களினால் வைத்தியர்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்கின்றதால் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்தால் பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியுமென்று யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ எரிக் பெரேரா தெரிவித்தார். Read more »

9 லட்சம் ரூபா செலவில் யாழ். மணிக்கூட்டு கோபுரத்திற்கு புதிய மணிக்கூடுகள்

யாழ். மகாத்மா வீதியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு புதிய மணிக்கூடுகள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். இந்த கோபுரத்திற்கான மணிக்கூடுகள் பொருத்தும் பணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றுக்கு Read more »

யாழில் ஒன்பதரை மணித்தியால மின்வெட்டு

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம்நகர்த்தவேண்டியிருப்பதாலும் புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் யாழின் பல பிரதேசங்களில் Read more »

வடமாகாண ஆளுநரின் செயலாளரிடம் வாய்முறைப்பாடு பதிவு: டி.ஜ.ஜி

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் தம்பியும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சு சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் சுமித் ஜெயக்கொடியிடமும் வாய்முறைப்பாடு பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.ஈ.எரிக் பெரேரா இன்று தெரிவித்தார். Read more »

தீக்காயங்களுக்குள்ளான இளைஞர் வைத்தியசாலையில்

தீக்காயங்களுக்குள்ளான இளைஞரொருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அராலி வீதியைச் சேர்ந்த சிவனொளி காண்டீபன் (வயது 17) என்ற இளைஞரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இவ்விளைஞர் Read more »