Ad Widget

யாழ். மாவட்டத்தில் இவ்வாண்டு 607 அபிவிருத்தித் திட்டங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்ட நிதியான 43.15 மில்லியன் ரூபாய் மூலம் யாழ்ப்பாணத்தில் 607 அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அதில் 364 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக என யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

DSCF0848

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையில் புதன்கிழமை (26) இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் யாழ் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் 60 வீதமான திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. வருகின்ற டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முதல் மிகுதி வேலைத்திட்டங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படமாட்டாது.

அத்துடன் பயனாளிகள் தெரிவில் முறைகேடான விடயங்கள் ஏதுவும் நடைபெற்றால் அதனை பரிசீலிப்பதற்கு யாழ் மாவட்ட செயலகத்தால் விசாரணை குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை என்னிடம் தெரியப்படுத்தப்படும் பட்சத்தில் அது தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலாளர் மேலும் கூறினார்.

Related Posts