- Thursday
- May 7th, 2026
டெல்லியில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொன்ற குற்றவாளி முகேஷ சிங் பி.பி.சிக்கு அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெண்களை பற்றி இழிவான கருத்துக்களை கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கண்டனங்கள் கிளம்பியுள்ளன. நடிகை டாப்சி கடவுள் அனுமதித்தால் கற்பழிப்பு குற்றவாளி முகேஷ்சிங்கை நானே கொலை செய்வேன் என்று ஆவேசமாக கூறினார். நடிகர்...
கதாநாயகிகள் மார்க்கெட் கொஞ்ச காலம்தான் என்று சுருதிஹாசன் கூறினார். இது குறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:– இசைப்பணிக்கும் எழுதுவதற்கும் வயதோடு சம்பந்தம் இல்லை. எந்த வயதிலும் எழுதலாம். பாடலாம், இசையமைக்கலாம். ஆனால் நடிப்புப் அப்படி அல்ல. கதாநாயகியாக இருப்பது கொஞ்ச காலம்தான். நீண்ட நாள் கதாநாயகியாக நீடிக்க முடியாது. இதில் நடிகர்கள் விதி...
வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனை இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோகீன் இன்று வெள்ளிக்கிழமை (06.03.2015) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கண்டி வீதி, அரியாலையில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. வலிகாமம் பகுதியில் நிலத்தடி நீரில் கலந்துள்ள...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விபூசிகாவின் தாயார் ஜெயக்குமாரியை உடன் விடுவிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக இன்று முற்பகல் நடைபெற்றது. மன்னார் மாதர் அமைப்புடன் இணைந்து பெண்கள் அமைப்பு உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. இதில் ஜனநாயக...
நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச 'வை - பை' (wi-fi)இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார். இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச வை...
இலங்கையில் நடந்ததைக் கூறி, நடந்த உண்மைகளை ஏற்றுக்கொண்டால்தான் நாம் முன்னேறமுடியும். அதன்மூலமே மக்களிடம் நல்லெண்ணத்தையும் சௌகரியத்தையும் ஏற்படுத்தமுடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர். யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட நோர்வே தூதுவர் கில்டி ஹரல்ற்சட், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இன்று முற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் கடற்புலி மகளிர் அணி தலைவி ஜெயகணேஸ் பகீரதியை 90 நாள்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 41வயதான பகீரதியும் அவரது 8 வயது மகளும் கடந்த மாதம் கிளிநொச்சி, பரந்தனுக்கு வந்து மீண்டும் பிரான்ஸுக்கு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான...
காணாமற்போனவர்களை மீட்டுத் தரக்கோரியும் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் இன்று வெள்ளிக்கிழமை காலை நல்லூர் ஆலயச் சூழலில் உண்ணாவிதப் போராட்டம் ஆரம்பமாகியது. காணாமற்போனோரின் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டத்துக்கு பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காணாமற்போன ஒருவரின் மனைவி என்ற அடிப்படையில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்...
ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி வடக்கில் புதிய கட்சியொன்று நேற்று வியாழக்கிழமை (5) உருப்பெற்றுள்ளது. ந.தேவகிருஸ்ணனை செயலாளர் நாயகமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'தொழிலாளர், விவசாயிகள் வாழ்வுரிமைக் கட்சி' வவுனியாவில் வைத்து அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மிகவும் பதற்றத்துடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நிறைவேறியது....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்ட கர்ப்பிணிகளுக்கான 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்படும் என்று அமைச்சரவைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு 2,000 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
காணாமற்போனோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்துக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (06) காலை 9 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கைது செய்யப்பட்டு காணாமற்போனோர், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் ஒப்படைக்கப்பட்டு காணாமற்போனார் ஆகியோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. குடும்பத்திலுள்ள ஒரு உறுப்பினர்...
புதிய தேர்தல் முறைமைக்கு அமைய, எதிர்வரும் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் முறைமையில்...
பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆலோசித்தே உள்ளக விசாரணைப் பொறிமுறை ஆரம்பிக்கப்பட வேண்டும். மாறாக கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட தோல்வியில் முடிந்த விசாரணைப் பொறிமுறையினை அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என ஐ.நா மனித மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹீசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 28ஆவது அமர்வு ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. அதில்...
இந்தியத் தலைநகர் டில்லியில் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொலைசெய்யப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் எங்கும் ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்த இந்திய அரசு, அந்த காணொளியை யூடியூபிலும் நீக்கும் முயற்சிகளை முன்னெடுத்ததாகவும், அதன் விலைவாக அந்த காணொளி யூடியூபில் இருந்து நீக்கப்ப்படுவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆவணப்படத்துக்கு எதிரான இந்திய அரசின் இந்த...
கமல்ஹாசன் படைப்புகள் எப்பொழுதுமே தனித்துவம் வாய்ந்தே இருக்கும். கடந்த வாரம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற உத்தம வில்லன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் கமல் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான், உத்தம வில்லன், விஸ்வரூபம் -2 , பாபநாசம் ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ்க்கு ரெடி ஆகியுள்ளன. இந்நிலையில் கமல்...
காமெடி கலந்த பேய்கதை என்ற புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்த படம், லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா. அதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 10 வெளியாகிறது. இந்தப் படத்தில் லாரன்ஸ் மொத்தம் 4 தோற்றங்களில் நடித்துள்ளார். 15 பையனாக, 25 வயது இளைஞனாக, 45 வயது மத்திய வயதுக்காரராக, 60 வயது கிழவராக என 4...
‘பீட்சா’ மற்றும் ‘ஜிகர்தண்டா’ என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கி திரையுலகில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்திய இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ். இவர் மற்றும் இவரது நண்பர்கள் ஒன்றாக இணைந்து சுயமாக திரைப்படம் எடுப்பவர்கள், தனித்திறமைகள் மிளிர நடிக்கவேண்டும் என்று தாகமுள்ள நடிகர்கள் ஆகியோருக்கு துணைக்கரம் நீட்டும் வகையில், பொழுதுபோக்குத் துறையில் ‘ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ்’ என்ற...
போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களிற்கு 1300 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலையொன்றை மாங்குளத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இம் மாகாணத்தில் 2014ம் ஆண்டிற்கான சிறந்த சுகாதார சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வு யாழில் நேற்று நடைபெற்றது. இதன்போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சத்தியலிங்கம் இவ்வாறு...
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நாளை வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 09.00 மணிக்கு இவ்வாறு போராட்டத்தினை அவர் ஆரம்பிக்கவுள்ளார். வட பகுதியில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள், இராணுவத்தில் சரணடைந்த காணாமல் போனவர்கள் உட்பட மீள்குடியேற்றம் போன்ற...
தனது பயன்பாட்டிற்காக காங்கேசன்துறை பகுதியில் ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டதாக வௌியாகும் செய்திகளில் உண்மையில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் அது சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்காக அமைக்கப்பட்ட கட்டிடம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 1980ம் ஆண்டு...
Loading posts...
All posts loaded
No more posts
