Ad Widget

பகீரதியை 90 நாள்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் கடற்புலி மகளிர் அணி தலைவி ஜெயகணேஸ் பகீரதியை 90 நாள்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

41வயதான பகீரதியும் அவரது 8 வயது மகளும் கடந்த மாதம் கிளிநொச்சி, பரந்தனுக்கு வந்து மீண்டும் பிரான்ஸுக்கு திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் அவர்கள் 72 மணித்தியால ஆரம்பக்கட்ட விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக 90 நாள்கள் காவல் உத்தரவை பெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விசாரணையை விரைவில் முழுமைப்படுத்த முடியும் என்று தாம் நம்புவதாகவும் பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை தமது பிரஜையின் கைது தொடர்பில் பிரான்ஸ் தூதரகம் சட்ட உதவிகளை வழங்கி வருகிறது. எனினும் அது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

Related Posts