- Thursday
- May 7th, 2026
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி - சென்ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றது. மத்திய கல்லூரி வீரர்கள் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை சமப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன் எடுத்த நடவடிக்கைகள் யாவற்றையும் தமது வியூகத்தினால் முறியடித்த சென்.ஜோன்ஸ் கல்லூரி வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப்...
வடக்கு மாகாணம் பல வழிகளிலும் நலிவடைந்துள்ள நிலையில் நிதி நிறுவனங்களின் வருகையினால் பொருளாதார நிலையில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது என யாழ். பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் துறை விரிவுரையாளர் இ. இரட்ணம் தெரிவித்தார். யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் வாழ்நாள் கூட்டுறவாளருமான வீ.கே அருந்தவநாதனின் சேவைநலன்பாராட்டு விழாவும் புதிய ஆணையாளரை வரவேற்கின்ற நிகழ்வும் வடமாகாண பனை ,...
காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரியும் நீதியான சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்றும் வலியுறுத்தி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 2ஆம் நாளாக நேற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது. காணாமல் போனோரின் அமைப்புக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதற்குப் பல அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன்போது கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல்...
இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேச்சு நடத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள், இனப்பிரச்சனைக்கு வடக்கு-கிழக்கு இணைந்த பிரதேசத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வு காண்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர...
சிம்பு-தனுஷ் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை என்று பல மேடைகளில் அவர்களே கூறியிருக்கிறார்கள். இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு விரைவில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இரண்டாம் உலகத்தை போன்றே நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் தனுஷ் தலையை...
உலகத் தமிழர்கள் அனைவரையும் சமீபத்தில் கவர்ந்தவர் ஜெசிக்கா. ஈழத்து சிறுமியான இவர் தன் குரலால் மட்டுமல்ல, ஈழத்தில் வாழும் ஏழைக்குழந்தைகளுக்கு தங்கம் வழங்கி தனது செயலாலும் எல்லார் மனதிலும் நீங்கா பிடித்தார். இவர் தற்போது அக்னி கணேஷ் இசையில், ஞானம் அவர்களின் வரிகளில் சரவண பொய்கை என்ற பாடல் ஒன்றை பாடியுள்ளார். சென்னையில் உள்ள ரெக்கார்டிங்...
கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம், எல்லை தாண்டி வரும் மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மிரட்டியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இந்திய-இலங்கை உறவை, சீன-இலங்கை உறவில் இருந்து வேறுபடுத்தியே வைத்திருக்கிறோம். இரண்டும் எங்களுக்கு முக்கியமானவை. இந்தியாவுடன் எங்களுக்கு வரலாற்று உறவு உள்ளது. இந்திய-இலங்கை...
சிகிரியாவில் உள்ள சுவரில் எனது மகள் தெரியாமல் எழுதிவிட்டால் அவளுக்கு அதில் எழுதக் கூடாது என்பது தெரியாது தெரியாமல் செய்த எனது மகளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? எப்படியாவது எனது மகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள் என உதயசிறியின் தாய் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். “உதயா” என தனது பெயரை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்ட மட்டக்களப்பு சித்தாண்டியைச்...
காணாமல் போன மலேசியன் ஏர்லைன்சிற்குச் சொந்தமான எம்எச்370 விமானம் இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்படும் என நம்புவதாக மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார். அந்த விமானம் தொடர்பான எந்தத் தகவலையும் மலேசிய அதிகாரிகள் மறைக்கவில்லையென்றும் லியோவ் தியோங் லாய் தெரிவித்துள்ளார். 239 பேருடன் காணாமல் போன அந்த விமானத்தைத் தேடும் பணியை...
கடந்த சில தினங்களாக இந்தியாவின் ஊடகங்கள் அனைத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது, நிர்பயாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான். காரணம் இந்த ஆவணப்படத்தில் பேட்டி அளித்த குற்றவாளியின் திமிர்த்தனமான பேச்சு. பிபிசி சார்பாக பெண் இயக்குநர் லெஸ்லி உட்வின் என்பவர் ‘இந்தியாவின் மகள்’ என்ற தலைப்பில் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆவணப்படத்திற்காக...
முல்லைத்தீவு, முறிகண்டி செல்வபுரம் பகுதியில் சனிக்கிழமை (07) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளை பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்றே குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் லொறியில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன், சாரதி...
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த காலங்களில் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொது மக்களுக்குச் சொந்தமான 11 யஹக்ரேயர் காணி சுவீகரிக்கப் பட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளு மாறு, யாழ்.மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். மருதங்கேணி...
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பப்பத்திரம் ஏற்றுக் கொள்ளும் இறுதித் தினம் இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் தினம் நேற்றுடன் (6) முடிவடையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
லண்டனில் "யாழ் வுட்" என்னும் ரகசிய தடுப்பு முகாம் ஒன்று இயங்கிவருவதாக சனல் 4 தொலைக்காட்சி ஆவணம் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் எவரும் கமராவோடு அங்கே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் முதன் முறையாக ரகசிய கமராக்களோடு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் உள்ளே நுளைந்து நடக்கும் கொடுமைகளை படம்பிடித்துள்ளார்கள். "யாழ் வுட்"...
காணாமற் போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்களா என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணாமற் போனவர்களின் உறவுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்ற கோரிக்கையொன்றை எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின் போது முன்வைக்கவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் அவர் விடுத்துள்ள ஊடகங்களுக்கான அறிக்கையில் காணாமற் போனதாகக் கூறப்படும் தமிழ்...
இலங்கைக்கு பயணத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ளமையால் அவரது வருகைக்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டே வௌிவிவகார அமைச்சர் நேற்று (06) தனது இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். சுமார் 25 வருடங்களுக்கு பிறகு ஒரு இந்திய பிரதமர் இலங்கைக்கு...
ரொம்ப வினோதமாக இருந்தது அந்தக் காட்சி. கேப்டன் டோணி, நேற்று பேட் கட்டிக் கொள்ளாமல் சில பந்துகளுக்கு கீப்பிங் செய்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். எல்லாம் சில்லித்தனமான காரணத்திற்காகத்தான்.. பயந்துடாதீங்க.. சில்லி பாயிண்ட்டில் பீல்டிங் செய்த அஜிங்கியா ரஹானேவுக்காக தனது பேடைக் கழற்றிக் கொடுத்து விட்டு தான் வெறும் காலுடன் கீப்பிங் செய்தார் டோணி. அஸ்வின்...
மனைவி தாமரையையும்,அவரது மகனையும் கணவர் தியாகு நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்ததோடு வீட்டிற்கு அழைத்துச் சென்றதால் கடந்த 8 நாட்களாக தாமரை நடத்திய போராட்டம் முடிவிற்கு வந்தது. திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரைக்கும், அவருடைய கணவரும், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தலைவருமான தியாகுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு...
நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர், நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நஜாபா என்ற அந்தக் கிராமத்திற்குள் புகுந்த துப்பாக்கிதாரிகள், வீடுகளைப் பார்த்துச் சுட்டனர். பிறகு கிராமத்திற்குத் தீ வைத்தனர் என இந்தத் தாக்குதலில் தப்பியவர்கள் தெரிவித்தனர்....
ஆடுகளம் படத்திற்காக சிறந்த எடிட்டர் என தேசிய விருது வாங்கியவர் கிஷோர். இவர் பல ஹிட் படங்களில் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மூளையில் இரத்தம் உறைந்ததால் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரின் மூளை செயலிழந்தது. இதனையடுத்து அவரின் உடலுறுப்புகளை தானம்...
Loading posts...
All posts loaded
No more posts
