- Thursday
- May 7th, 2026
முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியைப் பொறுவதற்கு இதுவரையில் 40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்தப் பதிவுகளை மேற் கொள்வதற்கான கால எல்லை இந்த மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் பதிவுகளுக்கான காலம் முடிவடைவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. உதவிகளைப் பெறப் பதிவு செய்பவர்களுக்கு...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க ஆகிய இருவரும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவு இன்று திங்கட்கிழமை காலை 10.33 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
வவுனியாவின் எல்லையோரங்களில் இருந்த சிங்கள மக்களையும் மீள்குடியேற்ற வேண்டும் என கூட்டமைப்பு சார்பு வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவினில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:- நாம் எந்த இனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. எல்லா மக்களையும் ஒன்றிணைத்துச் செயற்பட...
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் ஒருவருக்கும் நம்பிக்கையில்லாவிட்டாலும், அதில் தமது முறைப்பாட்டை பதிவு செய்வது கடமை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்திருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சனிக்கிழமையன்று சந்தித்துப் பேசியது குறித்து, பி.பி.சிக்கு அளித்த பிரத்யேக செவ்வியின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
கிளிநொச்சி மாவட்டத்தின் பின் தங்கிய கிராமங்களில் உள்ள குடும்பங்கள் தமது வருமானத்தின் பொருட்டு மேற்கொண்டு வரும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை உரிய முறைகளில் சந்தைப்படுத்த முடியாதுள்ளதாக கூறுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீள்குடியேறி வாழ்ந்து வரும் குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு குடிசைக் கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது உற்பத்தி...
வடமாகாணத்துக்கு புதிதாக 31 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண பிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸ்வர் சனிக்கிழமை (07) தெரிவித்தார். 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்த பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அவை முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம், காரைநகர், கிளிநொச்சி, பருத்தித்துறை சாலைகளுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளன. இவற்றை கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 13, 14ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும்...
வடபகுதி ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தென்னிலங்கை ஊடகவியலாளர் அமைப்பு சனிக்கிழமை (07) தெரிவித்துள்ளது. தென்னிலங்கை ஊடகவியலாளர் யாழ். ஊடக அமையத்தில் வடபகுதி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, அவ்வமைப்பின் ஊடகவியலாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 'வடபகுதியில் கொலை செய்யப்பட்ட காணாமல் போன மற்றும் அச்சுறுத்தப்பட்ட...
காரைநகர் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்காக கையளித்தார். காரைநகருக்கு விஜயம் மேற்கொண்ட செயலாளர் நாயகம் அவர்கள் குறித்த பஸ்தரிப்பு நிலையங்களை நேற்று (08) திறந்து வைத்தார். முன்னதாக வலந்தலை சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையம் திறந்து...
இளம் விதவைகளை மறுமணம் செய்து கொள்ள தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். விதவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கும் இதுவே சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்தார். யாழ்.நகரில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை...
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH-370 ஓராண்டுக்கு முன்னால் காணாமல் போனது சம்பந்தமாக மலேசிய அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இந்த விமானத்தில் இயந்திரக் கோளாறோ, அல்லது அதன் அதன் விமானி அல்லது சிப்பந்திகளில் எவர் மீதும் சந்தேகமோ இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் விமானம் நீருக்கடியில் விழுந்துவிட்டால் சமிக்ஞை அனுப்பி இருப்பிடத்தை காட்டிக்கொடுக்கும் கருவியில் இந்த...
கிராமங்களில் மண்ணையும் மரங்களையும் நேசித்து இயற்கையோடு ஒட்டி வாழ்பவர்கள் விவசாயிகள். விவசாயிகளுக்கும் இறுதி ஆசைகள் உண்டு. ஆனால் அந்த ஆசைகளும் இயற்கையோடு ஒட்டியே பெரும்பாலும் அமைந்துவிடுகின்றன. இலங்கையில் மத்திய மாகாணம், தம்புள்ளை நகருக்கு அருகே இருக்கின்ற சீகிரிய பிரதேசத்திலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கின்றது உடவலயாகம என்ற விவசாயக் கிராமம். இங்கு மண்ணையும் மழையையும் நம்பி வாழ்க்கை...
இஸ்லாமிய அரசு இயக்கத்தின் வழியில் பற்றுறுதி கொண்டுள்ளதாக போக்கோ ஹராம் அறிவித்திருப்பது, அந்த இயக்கத்தினர் நெருக்கடியை சந்தித்துவருவதையே காட்டுகின்றது என்று நைஜீரிய அரசாங்கம் கூறியுள்ளது. நைஜீரிய மற்றும் பிராந்திய இராணுவப் படைகளின் தாக்குதல்களின் விளைவாக, போக்கோ ஹராம் ஆயுததாரிகள் தமது வல்லமைகளை இழந்து, கடுமையான சேதங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். போக்கோ ஹராமின்...
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டு ஆட்சிமாற்றம் நடந்துள்ள சூழ்நிலையில், புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். எலிசபெத் மகாராணியின் தலைமையின் கீழ் இருக்கின்ற காமன்வெல்த் அமைப்பின் தற்போதைய நிர்வாகத் தலைவரான இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக...
இலங்கைக்கு உள்ளும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த்தேசியக் கருத்தாக்கம் பெண்ணியத்தை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறுகிறார் ஈழத்தின் பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம். இந்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவில் கொல்லப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்திய அரசால் தடுக்கப்பட்ட சர்ச்சை தொடரும் பின்னணியில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஈழத்தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்கார பிரச்சனைகள் குறித்து பிபிசி...
தமிழ் சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் டுவிட்டர் என்ற சமூக இணையதளத்தில் தங்களது பெயரில் தனியாக பக்கம் ஒன்றை தொடங்கி வைத்துக் கொண்டு, அதில் தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றியும், வெளிநாடுகளில் தங்களது விடுமுறை நாளை ஜாலியாக கொண்டாடியது என அத்தனை விஷயங்களையும் ரசிகர்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்கின்றனர். சூப்பர் ஸ்டார் முதல் பவர் ஸ்டார்...
நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்னும் நட்ராஜ், தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவர் ‘மிளகா’, ‘சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். பாலிவுட்டில் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார். புலி படத்திற்கு இவர் ஒளிப்பதிவு செய்வது தமிழில் இரண்டாவது படமாகும். இதற்கு முன் விஜய் நடிப்பில்...
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் 32ஆவது போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது. 377 ஓட்டங்களை இலக்காக கொண்டு இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் 312 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த போட்டியில் முன்னதாக நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள்...
காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும் ஐ.நா நீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகலுடன் முடிவடைந்தது. கடந்த மூன்று நாள்களாக இடம்பெற்று வந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகல் நீராகாரத்துடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இதேவேளை...
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 'சென்றல் நைட்' வருடாந்த ஒன்றுகூடலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலானது நேற்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின்...
புதிய அரசு அமைந்ததும் நிறைவேற்று சபையொன்றை அமைத்து தமிழ் மக்களது பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று கூறியவர்கள் இப்போது தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கத்துவமாக இருந்து கொண்டும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வாய்திறக்காமலே இருப்பதை நாம் கண்டிக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். 'உண்மையான...
Loading posts...
All posts loaded
No more posts
