Ad Widget

MH-370: காணாமல்போன விமானம் பற்றி மலேசியா ஆய்வறிக்கை

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH-370 ஓராண்டுக்கு முன்னால் காணாமல் போனது சம்பந்தமாக மலேசிய அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இந்த விமானத்தில் இயந்திரக் கோளாறோ, அல்லது அதன் அதன் விமானி அல்லது சிப்பந்திகளில் எவர் மீதும் சந்தேகமோ இல்லை என்று தெரிவித்துள்ளது.

malaysia-airlines-missing-mhm-370

ஆனால் விமானம் நீருக்கடியில் விழுந்துவிட்டால் சமிக்ஞை அனுப்பி இருப்பிடத்தை காட்டிக்கொடுக்கும் கருவியில் இந்த விமானம் விழுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பாகவே பேட்டரி தீர்ந்துபோயிருந்தது என்றும், அதனால்தான், அது விழுந்த நேரத்தில் அதனைக் கண்டுபிடிப்பது சிரமமாகியிருந்தது என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

239 பேருடன் பயணித்த இந்த விமானம் காணாமல்போய் சரியாக ஓராண்டாகும் நிலையில், அதன் எச்சங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் தாம் இன்னும் அக்கறை காட்டவே செய்வதாக மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதமர்கள் கூறுகின்றனர்.

இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் இந்த விமானத்தை தேடும் தற்போதைய பணியில் பலன் ஏற்படாமல் போனாலும், கவனிக்கத்தகுந்த அறிகுறிகள் கிடைக்கும் பட்சத்தில் வேறு ஒரு பகுதியிலுங்கூட இந்த விமானத்தை தொடரும் பணி முன்னெடுக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.

Related Posts